Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Memes: இருங்க அவசரப்படாதீங்க! எல்லாருக்கும் 2 புள்ளிகள் தருகிறோம்.. இர்பானை வைத்து CSK மீம்ஸ்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருவது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெறும் 103 ரன்கள் தான் அடித்தது. இதனை கொல்கத்தா அணி 10 புள்ளி ஒரு ஓவர் முடிவில் எல்லாம் வெற்றியை பெற்றது.

தற்போது விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி இருக்கிறது. மும்பை அணி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதனை சிஎஸ்கே ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

IPL Memes

அண்மையில் யூட்யூபர் இர்பான், ரமலான் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏழைகளுக்கு ஆடைகளை வழங்கினார். அது பெரும் சர்ச்சையானது. ஏனென்றால் ஆடைகளை வாங்க வந்தவர்கள் போட்டி போட்ட போது சிறிய கைகலப்பு போல் மாறியது. இதனால் கடுப்பான இர்ஃபான் இருந்த எல்லாருக்கும் இருக்கு என்று சொன்னார்.

தற்போது அதுவே சிஎஸ்கே ரசிகர்கள் மீம் டெம்ப்ளேட்டாக மாற்றி விட்டார்கள். இர்பான் மற்றும் அவருடைய மனைவியை சிஎஸ்கே மும்பை அணி போல் சித்தரித்து அவசரப்படாதீங்க எல்லாருக்குமே ரெண்டு புள்ளிகள் இருக்கு லைனில் வாருங்கள் என்று கூறுவது போல் ரசிகர்கள் பதிவிட்டு இருக்கிறார்கள். இதேபோன்று ஐபிஎல் தொடரில் நடப்பாண்டில் ஒரு பந்து டாட் பாலாக மாறினால் மரங்களை நட பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 120 பந்துகளை எதிர் கொண்டு 51 பந்துகளை டாட் பாலாக மாற்றி இருக்கிறது இதனால் சுமார் 25 ஆயிரத்து 500 மரங்கள் நட போகிறது. இதனை கிண்டல் செய்யும் விதமாக 25 ஆயிரம் மரங்கள் நட்டு சேப்பாக்கம் மைதானம் முழுவதும் மரங்களால் நிறைந்து இருப்பது போல் மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

இதே போன்று சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ்க்கு பதில் தோனி தலைமை தாங்கினார். எனினும் தோனி தலைமையிலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. இதனை பார்த்து ரசிகர்கள் இதை தானே ருதுராஜூம் செய்தார் என்று கேட்பது போல் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளனர். இதே போன்று சிஎஸ்கே அடித்த 23 ரன்களை கொல்கத்தா 10 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் சேஸ் செய்தது. இதனை சூரியின் பரோட்டா காமெடி போட்டு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். அதேபோன்று இந்தியன் தாத்தா சிஎஸ்கேவை பார்த்து பந்தை திங்காதிங்கடா டேய் என்று திட்டுவது போலவும் ரசிகர்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.

Story first published: Saturday, April 12, 2025, 19:26 [IST]
Other articles published on Apr 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+