Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- ஜடேஜா பேட்டிங்கை குறை சொன்ன பிளமிங்.. செய்தியாளர் சந்திப்பு மானத்தை வாங்கிய பயிற்சியாளர்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி மோசமாக தோல்வியை தழுவியதற்கு காரணம். பேட்டிங் பலமாக இல்லாததுதான். குறிப்பாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா எப்போதெல்லாம் பேட்டிங்கில் தடுமாறுகிறாரோ, அப்போதெல்லாம் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

ஜடேஜா முன்பு போல் அதிரடியாக ஆடும் தன்மையை வெளிக்காட்டுவதில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் ஜடேஜா மொத்தமாகவே 267 ரன்கள் தான் அடித்து இருந்தார். தற்போதைய சீசனில் கூட ஜடேஜா எட்டு போட்டிகளில் விளையாடி வெறும் 145 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

Jadeja

இந்த சூழலில் ஜடேஜா தற்போது பேட்டிங்கில் கொஞ்சம் முன் வரிசையில் விளையாடுகிறார். இதில் லக்னோ அணிக்கு எதிராக 11 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த ஜடேஜா, மும்பை அணிக்கு எதிராக 35 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். தற்போது ஜடேஜா முன் வரிசையில் களமிறங்குவதால் அதிக சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ஒரு காலத்தில் அதிரடி காட்டி வந்த ஜடேஜா நடப்பு சீசனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 164 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தாலும், சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வெறும் 87 என்ற அளவில் தான் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். மேலும் சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக சராசரியாக 12 ரன்கள் தான் ஜடேஜா நடப்பு சீசனில் அடித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் ஜடேஜா தனது பேட்டிங்கில் நிறைய முன்னேற்றத்தை காண வேண்டிய சூழலில் இருக்கிறார். அதே சமயம் தற்போது அவர் முன் வரிசையில் களமிறங்குவதால் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் சில ஆண்டுகளாக அவர் பேட்டிங்கில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

எனவே ஜடேஜா தனது பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் பார்த்து வருகிறோம். தற்போது ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் இருப்பதால் ஜடஜாவால் என்ன செய்ய முடியும் இல்லை. வேறு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் நாங்கள் பார்த்து வருகிறோம் என்று கூறி இருக்கின்றார்.

Story first published: Friday, April 25, 2025, 17:54 [IST]
Other articles published on Apr 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+