Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK அணியிலிருந்து ரச்சின் நீக்கப்பட வாய்ப்பு.. தொடக்க வீரராக ருதுராஜ்.. பிளேயிங் XI-ல் மாற்றம்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவி பரிதாபமான நிலையில் இருக்கிறது. புள்ளி பட்டியலில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9ஆம் இடத்தில் இருக்கிறது.

இனி எஞ்சி இருக்கும் 10 போட்டிகளில் சிஎஸ்கே அணி குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை பஞ்சாப் அணியுடன் மோதும் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

CSK vs PBKS

சந்திகாரில் நடைபெறும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ஆனால் ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணி பலமான அணியாக விளங்குகிறது. இந்த போட்டி சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

சிஎஸ்கே அணியில் பெரிய அளவு சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா தடுமாறி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரவிந்திரா 65, ரன்கள் ஆர்சிபி அணிக்கு எதிராக 41 ரன்களும் ரச்சின் அடித்தார். ஆனால் அதன் பிறகு 0, 3 என ரச்சின் மோசமாக விளையாடி வருகிறார். ரச்சின் ரவீந்திரா ஸ்ட்ரைக் ரைட்டும் பெரிய அளவு இல்லை. இதனால் ரச்சின் அணியை விட்டு நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

எனினும் அவர் இம்பேக்ட் வீரராக திரும்பி மூன்றாவது இடத்தில் விளையாடலாம் என்ற செய்தியும் தெளிவாகியுள்ளது. இதனால் கேப்டன் ருதுராஜ் தொடக்க வீரராக திரும்பினார். இதன் மூலம் ருதுராஜ், கான்வே மீண்டும் ஓப்பனிங் ஜோடியாக விளையாடுவார்கள், மூன்றாவது இடத்தில் ரச்சின் ரவீந்திரா விளையாட வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை ரச்சின் ரவீந்திரா இல்லை என்றால் அவருக்கு பதில் ஜிம்மி ஓவர்டன் பிளேயிங் லெவனுக்குள் வரலாம். இல்லையென்றால் ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிஸ்க்கு வாய்ப்பு வழங்கப்படும். பேட்டிங்கில் தான் சிஎஸ்கே அணி கடுமையாக தடுமாறி வருகிறது. இதனால் சிஎஸ்கே அணியில் இருக்கும் சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்கள் சாயிக் ரசித் மற்றும் வான்ஸ் பேடி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, April 7, 2025, 18:20 [IST]
Other articles published on Apr 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+