Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சிஎஸ்கே கதை அவ்வளவு தான்.. இனி வெல்ல முடியாது.. அம்பத்தி ராயுடு கருத்து

மும்பை: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை தழுவிய சிஎஸ்கே அணி, அண்மையில் லக்னோ அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் சிஎஸ்கே மேலே செல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை பற்றி ஜியோஸ்டார் நிபுணர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான மார்க் பவுசர், பேசுகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இது ஒரு பக்கமான ஆட்டமாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியினர் இதே போன்று நேர்த்தியான ஆட்டத்தை தொடர்ந்து விளையாட வேண்டும். மும்பை அணி சிறப்பாக பந்து வீசியது மட்டுமல்லாமல், ஆட்ட ஆரம்பத்தில் இருந்து கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

CSK

தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தால் சூர்யகுமார் யாதவ் எவ்வளவு ஆபத்தான வீரராக மாற முடியும் என்பதை இது காட்டுகிறது. ரோஹித் சர்மா நூறு அடிக்க வேண்டிய அவசியமில்லை-ஒரு வலுவான 70 ரன்களை அடித்தாலே போதும்-அதை அவர் செய்தார். ரோஹித் இது போல் இன்னிங்சை கட்டமைத்து விளையாடுவதை மேலும் பார்க்க ஆசைப்படுகிறேன். அதுவே சூர்யகுமார் மற்றும் திலக் போன்ற வீரர்கள் தாக்குப்பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது என்று கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா ஃபார்மிற்கு திரும்பியதைக் குறித்து, ஜியோஸ்டார் நிபுணர் அம்பத்தி ராயுடு பேசுகையில்,
"அவர் ஆரம்பத்தில் ஓர் இடைவேளையை எடுத்தார், ஆனால் ஆஃப் சைடில் சில சிறந்த ஷாட்டுகளை விளையாடினார். ஒவ்வொரு பந்தையும் ஆன்சைடில் அடிக்க முயற்சிக்கவில்லை. ரோஹித் ஏற்கனவே பல ரன்கள் எடுத்துள்ளார், ஆனால் இன்று அவர் பசிக்கொண்டு இருந்தார். அவர் மைதானத்தில் நேரம் செலவிட விரும்பினார், மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெறும் வரை விளையாட விரும்பினார்.
ரோஹித்தை நாங்கள் நன்கு அறிவோம், அவர் பெரிய இன்னிங்ஸ்களுக்கு எப்போதும் அருகில்தான் இருப்பார். இந்த மாதிரியான இன்னிங்ஸ்கள், பிசினஸ் எண்ட் நெருங்கும் போது, அவர் மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் மேனேஜ்மெண்ட்டிற்கும் நம்பிக்கையை தரும்."

MI vs CSK மோதல் குறித்து மார்க் பவுச்சர் தொடர்ந்து பேசுகையில், "இந்த போட்டி இந்தியாவை மட்டும் அல்லாது உலகளாவிய அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரசிகர்கள் இந்த 'ரெவெஞ்ச்' பார்க்க உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள். ரோஹித்துக்கு இந்த ஆட்டம் கூடுதல் ஊக்கமாய் இருக்கலாம், ஏனெனில் கடந்த சீசனில் CSKக்கு எதிராக 100 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் தனது உயர்ந்த தரத்திற்கேற்ப இன்னும் ஆட்டத்தை விளையாடவில்லை என்றாலும், இன்று அவர் ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
. இன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர். 2 புள்ளிகளை பெற மும்பை அணிக்கு அவசியமான ஒரு போட்டி இதுவாக இருந்தது, அனைவரும் பங்களித்தனர் என்று கூறினார்.

இதை தொடர்ந்து, CSK அணியின் தோல்வி குறித்து பேசிய அம்பத்தி ராயுடு "அந்த மத்திய ஓவர்கள்-சுமார் ஏழு ஓவர்கள், 35 ரன்கள் தான் சிஎஸ்கே எடுத்தார்கள். இதனால் தான் சிஎஸ்கே அணி தோற்றது. இன்றைய டி20 கிரிக்கெட்டில் யாரும் இப்படி விளையாடுவதில்லை. விளையாட்டு வளர்ந்துவிட்டது. மத்திய ஓவர்களிலும் ஒரு ஆர்வமுள்ள ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை பெறவேண்டும். இதனால் ரசிகர்களுக்கு CSK ஆட்டத்தில் ஆர்வம் குறைந்திருந்தது.

நீங்கள் ஒரு போட்டியை தோற்கலாம், ஆனால் போராடவேண்டும். ஒரு கட்டத்தை வெறும் கடக்க நினைத்து, இறுதியில் வெற்றிபெறலாம் என்று நினைக்க முடியாது. அந்த பீட்ச் குறைந்தபட்சம் 190 ரன்கள் தேவைப்பட்ட இடம். ஆனால் CSK அடித்த ரன்கள் அதற்கும் குறைவானது. முக்கியமான கட்டத்தில் கீழ்மட்டமான பேட்டிங்கை சிஎஸ்கே வீரர்கள் விளையாடி உள்ளளனர்.

CSK மீண்டும் வருமா? என கேட்க, பதில் அளித்த ராயுடு =
"இந்த சீசனில் சிஎஸ்கே மீண்டும் வெற்றி பக்கம் திரும்புவார்கள் என எனக்கு தெரியவில்லை. தோனி கூட அதைப் போட்டிக்குப் பிறகு கூறினார்-அவர்கள் அடுத்த சீசனை நோக்கிச் செல்கிறார்கள். இளைஞர்களை வளர்த்து, பயப்படாத, ஆனால் பொறுப்புள்ள ஆட்ட கலாச்சாரத்தை உருவாக்க விரும்புகிறார்கள். நேர்மறையான ஆட்டம் தேவை. ஆயுஷ் மாட்ரே போன்ற வீரர்களுக்கு முழு வாய்ப்பளிக்கலாம் என்று ராயுடு கூறியுள்ளனார்.

PBKS vs RCB போட்டியில் விராட் கோலியின் 67வது ஐபிஎல் ஐம்பது ரன்கள் பற்றி, ராயுடு பாராட்டினார். அதில்,
"அது விராட் கோலிக்கு ஏற்ற சூழ்நிலை ஆகும். அவர் அதற்கு ஏற்ப ஆட்டத்தை விளையாடினார். அவர் ஒரு கணினியைப் போல - எப்படி இன்னிங்ஸை கட்டவேண்டும் என்பது அவருக்கு தெரியும். எப்போது தாக்க வேண்டும், எப்போது ஸ்ட்ரைக் மாற்றவேண்டும் என்று நன்கு தெரியும். அவரின் உத்வேகம் நிலையானது. அவர் போட்டிக்கு முன்னதாகவும், நடுவிலும் எதிலும் அதிகமாக உணர்ச்சியில் ஆட்படுவதில்லை. நாம் ஒரு 'கிளாசிக்' கோலியை பார்த்தோம் என்று ராயுடு கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணியை பொருத்தவரை தற்போது பத்தாவது இடத்தில் இருக்கிறது இந்த நிலையில் சிஎஸ்கே அணி எஞ்சியிருக்கும் ஆறு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். சிஎஸ்கே விளையாடும் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா? சாவா என்ற கட்டத்தில் உள்ளதாகும். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமாக மாறிவிட்டது.

ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி இல்லாமல் பிளே ஆப் சுற்றே நடக்காது என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆப் சுற்றுக்கு சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை சிஎஸ்கே அணி இருக்கிறது. சிஎஸ்கே அணி இதுவரை புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் நிறைவு செய்ததில்லை.

ஆனால் தற்போது சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் பத்தாவது இடத்துடன் தொடரை நிறைவு செய்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து அதிரடியாக விளையாடுங்கள் என்று அறிவுறுத்த வேண்டும்.

இல்லை மெதுவாக பொறுப்பான ஆட்டத்தில் தான் விளையாட வேண்டும் என்று கூறினால் நிச்சயம் சிஎஸ்கே அணி தோல்வியை சந்திக்கும். சிஎஸ்கே அணி ரசிகர்கள் பலரும் இந்த சீசனை நினைத்து கடும் விரக்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் எஞ்சிய போட்டிகள் ஆவது சிஎஸ்கே அணி தொடர்ந்து வெற்றி பெற்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது ஆயுஷ் மாத்ரே போல் வான்ச் பேடி டிபார்ட் பிரைவஸ் போன்ற வீரர்களுக்கும் சிஎஸ்கே அணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Story first published: Monday, April 21, 2025, 17:58 [IST]
Other articles published on Apr 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+