For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது சிஎஸ்கே.. பிளே ஆப் வாய்ப்பை இழந்த தோனி படை.. பஞ்சாப் வெற்றி

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. இதனை அடுத்து விளையாடிய பத்து போட்டிகளில் சிஎஸ்கே அணி தற்போது 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

இதன் மூலம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் ஷேக் ரசித் 11 ரன்களிலும், ஆயுசு மாத்ரே ஏழு ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.

CSK

ஜடேஜா 12 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி பவர் பிளே முடிவில் 48 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இருந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட் ஜோடி சேர்ந்த பிரெவிஸ் மற்றும் சாம் கரண் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ஷாம்கரன் தன்னுடைய பல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

30 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் என விளாசிய சாம் கரண் 47 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். பிரவீஸ் 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக சாகல் கடைசி கட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த சிஎஸ்கே அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. இதனை அடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

இதில் தொடக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிராப்சிம்ரன் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் ஜோடி இந்த விக்கெட்டுக்கு 4.4 ஓவர்களில் தான் 44 ரன்கள் சேர்த்தது. பிரியான்ஸ் ஆர்யா 23 ரன்களில் ஆட்டம் இழக்க, பிராப்சிம்ரன் சிங் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும்.

நெஹல் வதேரா ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க ஸ்ரேயாஸ் தனி ஆளாக நின்று சிஎஸ்கே அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 41 பந்துகளை எதிர்கொண்ட அவர் 72 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர்கள் அடங்கும் . ஷாசாங் 12 பந்துகளில் 23 ரன்கள் சேர்க்க பஞ்சாப் அணி இரண்டு பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி இரண்டாவது இடத்திற்கு சென்றது. சிஎஸ்கே அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

Story first published: Wednesday, April 30, 2025, 23:47 [IST]
Other articles published on Apr 30, 2025
English summary
IPL 2025- CSK Knocked out from the Playoff as Punjab wins
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+