Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அபார சாதனை.. கடைசி மேட்சில் திருந்தி என்ன பயன்?

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சிஎஸ்கே அணிக்கு சமிபிரதாய ஆட்டமாகத்தான் அமைந்துள்ளது. எனினும் புள்ளி பட்டியலில் இதுவரை சிஎஸ்கே அணி 10வது இடத்தை நிறைவு செய்ததில்லை.

இந்த அவமானத்தை போக்க வேண்டும் என்றால் இன்று மிகப்பெரிய வெற்றியை குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே பெற வேண்டும். ஆனால் அது நடக்காத விஷயம். ஏனென்றால் சிஎஸ்கே அணி 200 ரன்களை தொடுவதற்கே தடுமாறியும் வந்தது.

CSK

வெறும் இந்த சீசனில் சிஎஸ்கே அணி டெஸ்ட் இன்னிங்ஸ் தான் ஆடி வந்தார்கள். இளம் வீரர்கள் வந்த பிறகு சிஎஸ்கே அணி அதிரடியை காட்டினாலும், பவர் பிளேவில் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்தது மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தியது. இந்த சூழலில் இன்று சிஎஸ்கே அணி தங்களது தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அபாரமாக விளையாடினார்கள்.

குறிப்பாக ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர் அடங்கும். இதே போன்று உர்வில் பட்டேல் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க, சிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். ஒரு புறம் இளம் வீரர்கள் அதிரடி காட்ட அனுபவ வீரரான கான்வேவும் அபாரமாக விளையாடி வந்தார்.

6 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 35 பந்துகளில் அவர் 52 ரன்கள் எடுத்தார். பவர் பிளே முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 8.5 ஓவர் எல்லாம் சிஎஸ்கே அணி 100 ரன்களை தொட்டது. இதைப்போன்று 13 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 150 ரன்கள் தொட்டிருக்கிறது.

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிஎஸ்கே அணி தோல்வியில் இருந்து பாடம் கற்று இருப்பதாகவும், ஆனால் இதை கடைசி ஆட்டத்தில் செய்து என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபோல் ஒரு ஆட்டத்தை தொடர் முன்பே சிஎஸ்கே அணி வெளி கொண்டு இருந்தால் இந்நேரம் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஒரு அணியாக விளங்கி இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, May 25, 2025, 16:54 [IST]
Other articles published on May 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+