சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான தோனி, வரும் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்காக சிறப்பான முறையில் தயாராகி வருகிறார்.
43 வயதான தோனி ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களிடம் பிரியா விடை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை துறந்த நிலையில், தற்போது சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தான் விளையாடுகிறார்.

மேலும் தோனி, தற்போது பேட்டிங் வரிசையில் ஏழாவது அல்லது எட்டாவது வீரராக தான் களமிறங்குகிறார். இந்த நிலையில் தோனிக்கு தற்போது வயதாவதால் அதற்கு ஏற்ப தன்னுடைய பேட்டிங் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். தோனி எப்போதுமே பந்துகளை துவம்சம் செய்வதில் வல்லவர்.
தோனி போன்ற அதிரடி வீரர்கள் எல்லாம் எப்போதுமே எடை கூட இருக்கும் பேட்டை தான் பயன்படுத்துவார்கள். மற்ற வீரர்கள் பயன்படுத்துவதை விட சுமார் 200 அல்லது 300 கிராம் எடை கூட இருக்கும். இதன் மூலம் பேட்டை அடிக்கும்போது பந்து சிக்ஸருக்கு பறந்து செல்லும். அந்த வகையில் தோனி பயன்படுத்தும் பேட்டின் எடை 1250 முதல் 1300 கிராம் இருக்கும்.
இந்த நிலையில் தோனி தற்போது வயதாவதால் பேட்டின் எடையை குறைக்க முடிவெடுத்திருக்கிறார். வயதின் காரணமாக பேட்டை முன்பு போல் எளிதாக தூக்கி அடிக்க முடியாது. மேலும் பந்து வர வேகத்திற்கு பேட்டை வீசும் ரிப்லெக்ஸ் என்று கூடிய தன்மை வயதாக வயதாக குறைந்து விடும். இதனை சமாளிப்பதற்காக தான் தோனி தற்போது பேட்டின் எடையை குறைக்க முடிவு எடுத்திருக்கிறார்.
இதன் மூலம் மெல்லிய பேட்டுகளை வைத்து விரைவாக அடிக்க முடியும் என தோனி நினைக்கின்றார். எடை குறைவான பேட்டை பயன்படுத்தும் போது கை தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சனைகள் இருக்காது. ஆனால் பந்து அதிக தூரத்திற்கு செல்வது மட்டும் பாதிக்கப்படும். இதனை சமாளிக்க தோனி பேட்டை அடிக்கும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். இதற்காகத்தான் எடை குறைவான பேட்டை பயன்படுத்த தோனி முடிவெடுத்து இருக்கிறார். தன்னுடைய 22 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின் தோனி முதல்முறையாக எடை குறைவான பேட்டை சிஎஸ்கே அணிக்காக பயன்படுத்தப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.