For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025 -சிஎஸ்கே அணிக்கு கம்பேக் கொடுக்க போகும் அஸ்வின் உள்ளிட்ட 3 பழைய வீரர்கள்.. எப்படினு பாருங்க

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மறக்க முடியாத ஒரு தொடராக இருக்கப் போகிறது. காரணம் 43 வயதாக இருக்கும் தோனி தன்னுடைய கடைசி தொடரில் சென்னை அணிக்காக விளையாட போகிறார். அது மட்டும் அல்லாமல் சென்னை அணியில் இருந்து சென்ற பல வீரர்கள் மீண்டும் சிஎஸ்கேவுக்கு திரும்ப ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அது யார் எப்படி என்று தற்போது பார்க்கலாம். ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த வகையில் சில அணிகள் சில வீரர்களை அதிரடியாக நீக்கி இருக்கிறது.

ipl retention ipl 2025 csk r ashwin

இதனால் அந்த வீரர்கள் வேறு அணிக்கு செல்ல போகிறார்கள். இந்த பார்முலாவை பயன்படுத்தி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பழைய மூன்று வீரர்கள் வர வாய்ப்பு இருக்கிறது. சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த அஸ்வின் தற்போது மீண்டும் சிஎஸ்கேவுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுக்கப் போகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த அஸ்வின் தற்போது அந்த அணியால் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். மேலும் அந்த அணியிடம் ஆர் டி எம் கார்டு இல்லை. இதனால் சிஎஸ்கே அணி அஸ்வினை மீண்டும் ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் டுபிளசிஸ். டுபிளசிஸ்க்கு வயது 40 ஆகிவிட்டது. வயதை காரணம் காட்டி ஆர்சிபி அணி அவரை நீக்கி இருக்கிறது. இதனால் ஆர் சி பி அணி டுபிளசிசை ஏலத்தில் எடுக்காது. வயதான வீரர்களை வாங்கி குவிப்பதில் சி எஸ் கேக்கு நிகராக வேறு யாரும் இல்லை.

அது மட்டுமல்லாமல் டுபிளசிஸ்க்கு ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக தென்னாப்பிரிக்கா ,அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடுவதால் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு டுபிளசிஸ்க்கு கம்பேக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் சாம்கரன். பஞ்சாப் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும், அவரை ஆர்டிஎம் கார்டு மூலம் தக்க வைக்க அந்த அணி முயற்சி செய்யலாம்.எனினும் பஞ்சாப் அணி அதிக பணம் செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால் சிஎஸ்கே அணி ஷாம் கரணை நிச்சயம் வாங்கிவிடும். இதன் மூலம் இந்த மூன்று பழைய வீரர்களுமே சிஎஸ்கே அணிக்கு திரும்ப வாய்ப்பிருக்கிறது.

Story first published: Thursday, October 31, 2024, 21:11 [IST]
Other articles published on Oct 31, 2024
English summary
IPL 2025- CSK Might bring Back this 3 Former Team mates including R Ashwin சிஎஸ்கே அணிக்கு கம்பேக் கொடுக்க போகும் அஸ்வின் உள்ளிட்ட 3 பழைய வீரர்கள்.. எப்படினு பாருங்க
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+