CSK - சிஎஸ்கேவின் ரூ.14 கோடி வீரருக்கு கல்தா.. அணியை விட்டு விடுவிக்க தோனி முடிவு.. காரணம் என்ன?
மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் அதற்கான தயாரிப்பு பணிகளை இப்போதே ஒவ்வொரு அணியும் செய்து வருகிறது.கடந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை.
இது சென்னை அணிக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதனால் சென்னை அணி இம்முறை எப்படியாவது பிளே ஆப் சுற்றுக்கு சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்குகிறது.

சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் இருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. மெகா ஏலத்தில் புதிய புதிய வீரர்களை எடுக்க வேண்டும் என்றால் ஓரளவுக்கு ஊதியம் கையிருப்பு வேண்டும். இதன் காரணமாக தோனி தன்னுடைய ஊதியத்தை குறைத்துக் கொண்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்களும் தற்போது அணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர். அதில் முக்கியமான ஒரு வீரராக கருதப்படுபவர் நியூசிலாந்தை சேர்ந்த 32 வயது வீரரான 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் டேரல் மிட்செல். இவர் 500 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தினார்.
சுழற் பந்துவீச்சை அபாரமாக விளையாடுவார் என நம்பி அவருக்கு 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் கடந்த ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி மொத்தம் 318 ரன்கள் எடுத்திருந்தார். இது ஒரு அளவுக்கு டீசன்டான செயல்பாடு என்றாலும், 14 கோடி ரூபாய் என்பது இவருக்கு அதிகமாக கருதப்படுகிறது.
இதனால் சிஎஸ்கே அணி மெகா எலத்திற்கு முன்பே டேரல் மிட்செலை விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் அணியின் கையிருப்பு தொகை அதிகமாக இருக்கும். அதன் பிறகு ஐபிஎல் மெகா ஏலத்தில் மீண்டும் டேரல் மிட்செலை குறைந்த விலைக்கு எடுக்க சிஎஸ்கே அணி முடிவு எடுத்திருக்கிறது. இதனால் 14 கோடி ரூபாயாக இருக்கும் டேரல் மிட்சலின் சம்பளம் சுமார் 10 கோடி ரூபாய் வரைக்கும் குறைந்து நான்கு கோடி ரூபாய் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications