விக்கெட் கீப்பிங்கே பண்ணலை.. தோனியின் பிராக்டீஸ்.. வாயை பிளந்த இளம் சிஎஸ்கே வீரர்கள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள வீரர்கள் பலரும் தோனியின் உடற்தகுதியைப் பார்த்தும், அவர் பயிற்சி செய்யும் விதத்தை பார்த்தும் வியந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த பேட்டிகளிலும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
43 வயதாகும் தோனி, பயிற்சியில் பல இளம் வீரர்களை விட பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதைப் பார்த்து அவர்கள் வியந்துள்ளனர். மேலும், அவர் விக்கெட் கீப்பிங்கிற்கு இதுவரை பயிற்சி செய்யவில்லை என்பதும் அவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தோனி ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை.

பேட்டிங்கில் தடுமாற்றத்தை சந்தித்தார். அவருக்கு முழங்காலில் ஒரு பிரச்சனை இருந்தது. அதற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். 2024 ஐபிஎல் தொடரில் அவரால் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்யவும் முடியவில்லை. விக்கெட் கீப்பிங்கில் அரிதாக சில தவறுகளை செய்தார். அதற்கு அவரது முழங்கால் பிரச்சனை தான் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், இந்த முறை அவருக்கு அந்த பிரச்சனை சரியாகிவிட்டது என்பதை குறிக்கும் வகையில் அவரது பயிற்சி அமைந்துள்ளது. இதுவரை பயிற்சியில் அவர் சிக்ஸர்களையும், பெரிய ஷாட்களையும் மட்டுமே அடித்து வருகிறார். இதன் மூலம் அவர் ஃபினிஷராக விளையாட விரும்புகிறார் என்பதையும், முன்பை விட இளம் வீரர்களுக்கு ஈடு கொடுத்து அதிரடியாக சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்ற முடிவிலும் உள்ளார் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
விக்கெட் கீப்பிங்கில் கடந்த ஆண்டு சில தடுமாற்றங்கள் இருந்த போதும், இந்த முறை அவர் அதற்காக பயிற்சி செய்யவில்லை. இதிலிருந்து அவரது உடல் தகுதி 100% சரியாக இருப்பதால்தான் அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு இருக்கும் அனுபவத்தில் அதற்கான பயிற்சி எல்லாம் தேவையே இல்லை. எனினும், உடற்தகுதி சார்ந்துதான் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.
தோனிக்கு தற்போது அந்த பிரச்சனை ஏதும் இல்லாததால் அவர் அதற்கான பயிற்சிகளையும் செய்யவில்லை. சிஎஸ்கே அணியில் புதிதாக இடம்பெற்றிருக்கும் தீபக் ஹூடா, நூா் அகமது, நாதன் எல்லீஸ், கலீல் அஹமது ஆகியோர் அவரது பயிற்சி முறைகளைப் பார்த்து வியப்பின் உச்சிக்கு சென்றுள்ளனர்.
சிஎஸ்கே அணி அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தப் போட்டி வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 28 அன்று நடைபெற உள்ளது.
செய்தி சுருக்கம்:
- தோனியின் உடற்தகுதியைப் பார்த்து சிஎஸ்கே வீரர்கள் வியந்துள்ளனர்.
- 43 வயதிலும் தோனி இளமை துடிப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- விக்கெட் கீப்பிங்கிற்கு அவர் பயிற்சி செய்யவில்லை.
- முழங்கால் பிரச்சனை சரியாகிவிட்டதால் அவர் அதிரடியாக விளையாட தயாராகி வருகிறார்.
- சிஎஸ்கே அணி அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications