Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே-க்கு காத்திருக்கும் வரலாற்று அவமானம்..இது மட்டும் நடந்தால் தோனி மானம் போச்சு..அடுத்தது என்ன?

சென்னை: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறி இருப்பது இதுதான் முதல் முறை. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி எட்டு போட்டிகளில் தோல்வியை தழுவி வெறும் இரண்டு வெற்றிகள் உடன் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

இன்னும் எஞ்சியிருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணியால் வெல்ல முடியாது. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு தற்போது மிகப்பெரிய ஒரு அவமானம் காத்துக் கொண்டிருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 16 சீசன்களில் விளையாடி இருக்கிறது. இந்த 16 சீசன்களிலும் ஒருமுறை கூட சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்தது கிடையாது. குறைந்தபட்சமாக சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திலும் நிறைவு செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்க வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி எஞ்சியிருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆக வேண்டும். இதன் மூலம் சிஎஸ்கே அணி கடைசி இடத்தை பிடிப்பதை தவிர்க்க முடியும். இதனால் சிஎஸ்கே அணி கண்டிப்பாக நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றியை பெற்று தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.சிஎஸ்கே அணி எஞ்சியிருக்கும் நான்கு போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தற்போது பார்க்கலாம்.

சி எஸ் கே தேவை இல்லாமல் தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திருப்பாதி போன்ற வீரர்களை தொடர்ந்து ஆதரித்ததன் காரணமாக தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று வீரர்களில் ஒருவர் கூட இல்லாமல் சிஎஸ்கே அணி நடப்பாண்டில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதிலும் தீபக் ஹூடா மிகவும் மோசமாக விளையாடி வருகிறார்.
அவருக்கு பதிலாக இளம் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோல் தான் சிஎஸ்கே அணி முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியது. அப்போது ருதுராஜ் தொடக்க வீரராக களம் இறங்கி ஹாட்ரிக் அரை சதத்தை அடித்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு புதிய அணியை கட்டமைத்த சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதே போல் தற்போது ஒரு நிலையை சிஎஸ்கே அணி எட்ட வேண்டும் என்பது தற்போது ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Story first published: Thursday, May 1, 2025, 11:55 [IST]
Other articles published on May 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+