Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சிஎஸ்கே அணியில் இன்னும் 3 பிரச்சினை இருக்கு.. அது சரி செய்யலனா வெற்றி தொடராது

சென்னை: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. இதனால், ஒட்டுமொத்த ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், சிஎஸ்கே அணி இந்த வெற்றி பெற்ற பிறகும் புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் தான் இருக்கிறது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றாம் எஞ்சி இருக்கும் 7 போட்டிகளில் குறைந்தபட்சம் 6 போட்டிகளிலாவது வெல்ல வேண்டும்.

இது கொஞ்சம் கடினதான காரியம் தான். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது கை வந்த கலை தான். அவ்வளவு ஏன் சிஎஸ்கே அணியே 2010 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற போது, இதே மாதிரி தான் முதல் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஆனால், அந்த தொடரில் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றது. இதே போல் தற்போது நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு சிஎஸ்கே அணி முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

CSK

சிஎஸ்கே அணி, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே தங்களுடைய பிளேயிங் லெவனை மாற்றியதுதான். இளம் வீரர் ஒருவரை பிளேயிங் லெவனுக்கு கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த சூழலில் சிஎஸ்கே அணி சேக் ரஷித்தை கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து பெஞ்சில்தான் அமர வைத்திருந்தது.

இந்த சூழலில் இரண்டு ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு ஷேக் ரசித் லக்னோ அணிக்கு எதிராக களமிறங்கி அபாரமாக விளையாடினார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு பவர் பிளேவில் நல்ல ரன்கள் கிடைத்தது. இதேபோன்று சிஎஸ்கே அணி அன்சூல் காம்போஜ் என்ற வேகப்பந்து வீச்சாளரை அணிக்குள் சேர்த்திருக்கிறது. அவரும் சிறப்பாக செயல்படுகிறார்.இப்படி இரண்டு புதிய வீரர்கள் வந்ததே சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் சிஎஸ்கே அணி தங்களுடைய அதிரடி முடிவை எடுக்க வேண்டும். சிஎஸ்கே அணி எதற்கு ராகுல் திருப்பாதிக்கு வாய்ப்பு தொடர்ந்து கொடுக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. ராகுல் திருப்பாதி கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் தற்போது அவர் பார்மில் இல்லாமல் இருக்கின்றார். தமக்கு பேட்டிங்கே மறந்து விட்டது என்பது போல் அவர் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்கின்றார்.

ராகுல் திருப்பாதிக்கு வயதும் ஆகிவிட்டது என்பதால் அவரை அணியை விட்டு நீக்கி விட்டு இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கின்றது. சிஎஸ்கே அணியில் எப்படி சேக் ரசித் அபாரமாக விளையாடினாரோ, அதைவிட அதிரடியாக ஆடக்கூடிய வான்ஸ் பேடி என்ற ஒரு வீரர் இருக்கிறார். டெல்லி பிரிமியர் லீக் தொடரில் 200க்கு மேல் ஸ்டிரைக் ரைட்டை அவர் வைத்திருந்திருக்கிறார்.

பவுண்டரி, சிக்ஸர் என அடிக்கக்கூடிய வான்ஸ் பேடியை நம்பி சிஎஸ்கே அணி அவருக்கு பிளேயிங் லெவனனில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எப்படி பஞ்சாப் அணி, பிரியான்ஸ் ஆர்யாவை கண்டுபிடித்ததோ அதேபோல் வான்ஸ் பேடி சிஎஸ்கே அணியின் கண்டுபிடிப்பாக இருப்பார் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ராகுல் திருப்பாதியை நீக்கிவிட்டு வான்ஸ் பேடியை மூன்றாவது வீரராக சிஎஸ்கே அணி களமிறக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதே போன்று ஆயுஷ் மாத்ரே என்ற 17 வயது வீரரை சிஎஸ்கே அணி தற்போது தேர்வு செய்துள்ளது. ருதுராஜ்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக மாற்றுவீரரை சிஎஸ்கே இவரை தான் எடுத்திருக்கிறது.

ஆயுஸ் மாத்ரே அபாரமாக விளையாடக்கூடிய வீரராக இருக்கின்றார். ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பட்டையை கிளப்பி இருக்கின்றார். இதனால் ஆயுஷ் மாத்ரே பிளேயிங் லெவனில் சிஎஸ்கே அணி இடம் தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். விஜய் சங்கர் நல்ல வீரராக இருந்தாலும், தற்போது மாறிவரும் டி20 கிரிக்கெட் போட்டிக்கு அவர் ஏற்ற வீரர் கிடையாது என்பதுதான் ரசிகர்களின் வாதமாக இருக்கின்றது.

விஜய் சங்கர் கடந்த இரண்டு மூன்று போட்டிகளில் நல்ல ரன்களை எடுத்தாலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகப்பெரிய கேள்வியாக இருப்பதாகவும் அவரால் பெரிய அளவுக்கு சிக்ஸ், பவுண்டரியோ அடிக்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். இதனால் மும்பை ,பெங்களூரு போன்ற ஆடுகளங்களில் விளையாடும் போது விஜய் சங்கர் சரிபட்டு வர மாட்டார் என்றும் பலரும் கூறுகின்றனர்.

இதனால் விஜய் ஷங்கரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு முற்றிலும் வாய்ப்பு தர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணி பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிலும் சரி வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஜடேஜாவின் கையில் தான் இருக்கின்றது. சிஎஸ்கே அணி எப்போதெல்லாம் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறதோ, அப்போதெல்லாம் ஜடேஜா நல்ல பார்மில் இருந்திருக்கிறார்.

சிஎஸ்கே அணி எப்போதெல்லாம் தோற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் ஜடேஜாவும் பார்ம் அவுட் ஆகி இருக்கிறார். இதனால் ஜடேஜா எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் சிஎஸ்கே அணியின் எதிர்காலம் நடப்பு சீசனில் இருக்கிறது. இதனால் ஜடேஜா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக ஜடஜாவை முன்வரிசையில் சிஎஸ்கே களமிறங்கி உள்ளது.

இது ஒரு நல்ல முயற்சியாகும் பேட்டிங்கில் சிஎஸ்கே அணி இந்த மாற்றங்களை செய்தால் மட்டுமே தொடர் வெற்றிகளை பெற முடியும். இல்லையென்றால் இந்த வெற்றி ஏதோ அத்திப்பூத்தது போல் மாறிவிடும். பந்துவீச்சை பொருத்தவரை அஸ்வினை நீக்கிருப்பது சரியான முடிவாக தான் இருக்கின்றது. ஏனென்றால் அஸ்வின் பழைய பார்மில் இல்லை. அவர் பிளேயிங் லெவனில் இருப்பதால் அணியின் பேலன்ஸும் தடுமாறுகிறது.

இதேபோன்று ரச்சின் ரவீந்திரா தன்னுடைய ஃபார்மை மீட்க வேண்டும். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடி வரும் ரச்சின் தமக்கு டி20 போட்டியில் ஆட வரும் என்பதை காட்ட வேண்டும். மேலும் ரச்சன் ரவீந்திராவின் பந்துவீச்சை சிஎஸ்கே அணி ஒரு இரண்டு ஓவர்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த சீசனங்களில் எல்லாம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை ஒன்பது, பத்தாவது வீரர் வரை இருக்கும்.

ஆனால் தற்போது 7, 8 வரை தான் இருக்கிறது. இது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று தோனி தொடக்க வீரர்கள் கிரிக்கெட்டில் உள்ள ஷாட்டை தான் ஆட வேண்டும். மற்ற அணி வீரர்கள் அதிரடியாக ஆடுகிறார்கள் என்பதால் நீங்களும் அப்படி அதிரடி காட்ட வேண்டாம் என்று கூறி வருவதும் தவறான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. உங்களுக்கு என்ன ஷாட் வருமோ அதை தைரியமாக ஆளுங்கள். உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறுவதே தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ற விஷயமாகும். இதனால் தோனி இந்த தவறை செய்யக்கூடாது என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Tuesday, April 15, 2025, 23:52 [IST]
Other articles published on Apr 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+