Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: 281 ஸ்ட்ரைக் ரேட்.. 6 பந்தில் 3 சிக்சர்! மிரள வைத்த urvil Patel.. எங்க இருந்தீங்க இவ்வளவு நாளா?

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இந்த சீசன் அதிகப் போட்டிகளில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமே பவர் பிளவில் களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடவில்லை என்பதுதான். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ராகுல் திருப்பாதி, ரச்சின் ரவிந்த்ரா உள்ளிட்ட வீரர்கள் பவர் பிளேவில் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறினார்கள்.

இதன் காரணமாக சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை தழுவியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த வான்ஸ் பேடி என்ற வீரருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து மாற்று வீரராக உர்வில் பட்டேல் என்ற 26 வயது வீரரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.

IPL 2025 CSK vs KKR Urvil Patel 2025 IPL Turning Point

உர்வில் பட்டேல் ஏற்கனவே குஜராத் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், அவருக்கு வாய்ப்பு கடந்த சீசன்களில் வழங்கப்படவில்லை. இவர் சையது முஸ்தாக் அலி தொடரில் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தி இருந்தார். இந்த சூழலில் ஐபிஎல் மெகா ஏலத்தில் உர்வில் பட்டேல் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்த தருணத்தில் மாற்று வீரராக சிஎஸ்கே அணி உர்வில் பட்டேல் ஒப்பந்தம் செய்து இன்று கே கே ஆர் அணிக்கு எதிராக முதல் போட்டியிலே களம் இறக்கியது. உர்வில் பட்டேல் பேட்டிங்கை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் இந்த தங்கத்தை இவ்வளவு நாளாக ஏன் எந்த அணியும் எடுக்காமல் இருந்தார்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே ஆட்டத்தில் இரண்டாவது பந்திலே பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து மூன்றாவது பந்தை எதிர்கொண்ட உர்வில் பட்டேல் ரன் ஏதும் அடிக்கவில்லை. எனினும் ஆட்டத்தின் நான்காவது பந்தை அபாரமாக சிக்ஸர் அடித்து அசத்தினார். இதேபோன்று மோயின் அலி வீசிய பந்திலும் உர்வில் பட்டேல் சிக்ஸர், பவுண்டரி, சிக்சர் என அடித்து மிரள வைத்தார்.

தாம் எதிர்கொண்ட முதல் ஆறு பந்திலேயே உர்வில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்ட முயன்ற உர்வில் பட்டேல் கேட்ச் ஆனார் .11 பந்துகளை எதிர் கொண்ட உர்வில் பட்டேல் 31 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் என 251 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் .

Story first published: Wednesday, May 7, 2025, 22:49 [IST]
Other articles published on May 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+