For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: ஒவ்வொரு சீசனிலும் முதல் 5 போட்டிகளில் சிஎஸ்கே பெற்ற வெற்றி எவ்வளவு? இது தான் மோசமான சீசனா?

சென்னை: ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய சீசன்களில் வெறும் மூன்று சீசன்கள் மட்டும்தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் இருந்திருக்கிறது. சிஎஸ்கே அணி என்றால் கண்டிப்பாக பிளே ஆப் க்கு சென்று விடுவார்கள் என்று நினைக்கும் அளவுக்கு சிஎஸ்கே அணியின் செயல்பாடு இருந்தது.

இந்த நிலையில் ஆர் சி பி போன்ற அணிகள் எல்லாம் கையில் கால்குலேட்டர் வைத்து பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறதா என்று சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் சிஎஸ்கேவுக்கு அப்படி ஒரு நிலை பெரும்பாலும் ஏற்பட்டது இல்லை.

CSK

தற்போது ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வி, ஒரு வெற்றியை மட்டும் தான் பெற்றிருக்கிறது. இந்த சூழலில் ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு சீசனிலும் முதல் ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே அணி எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது தோல்வியை தழுவி இருக்கிறது என்று பார்க்கலாம். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்தாவது போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது.

2009 ஆவது சீசனில் சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் மூன்று தோல்வி, ஒரு வெற்றி ஒரு போட்டி மழையால் பாதிப்பு என மூன்று புள்ளிகளை பெற்றிருந்தது. சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற 2010 ஆம் ஆண்டு முதல் ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி, மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதேபோன்று 2011 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சீசனிலும் சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வியை தழுவி இருக்கிறது.

2012 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவி இருக்கிறது. 2013-ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளை அடைந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு ஐ பி எல் சீசனில் சிஎஸ்கே அணி ஒரு தோல்வி, நான்கு வெற்றி தழுவி இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி நான்கு வெற்றி ஒரு தோல்வியை தழுவி இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு தடைக்கு பின் களம் இறங்கி சாம்பியன் பட்டம் வென்ற சீசனில் சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றி, ஒரு தோல்வியை தழுவி இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே அணி நான்கு வெற்றி, ஒரு தோல்வியை தழுவியுள்ளது. 2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே வின் மிகவும் மோசமான ஒரு சீசனாக பார்க்கப்பட்டது. அதில், சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி நான்கு வெற்றி ஒரு தோல்வியை தழுவி இருக்கிறது.

2022 ஆம் ஆண்டும் சிஎஸ்கே அணிக்கு மிகவும் மோசமான சீசனாக அமைந்தது. அதில் சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் நான்கு தோல்வி ஒரு வெற்றியை பெற்றிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சீசனில் முதல் ஐந்து போட்டியில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளை சிஎஸ்கே பெற்று இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளை தழுவி இருக்கிறது. தற்போது 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி ஒரு வெற்றி நான்கு தோல்வியை தழுவி இருக்கிறது. சிஎஸ்கே 2022 ஆம் ஆண்டு மட்டும் தான் இதே போல் மோசமாக விளையாடி இருக்கிறது. தற்போது அதேபோல் ஒரு பாதையில் தான் சிஎஸ்கே சென்று கொண்டிருக்கிறது.

Story first published: Wednesday, April 9, 2025, 8:01 [IST]
Other articles published on Apr 9, 2025
English summary
IPL 2025- CSK Performances of First 5 Matches in Every season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+