Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.. தீபக் சஹரை தக்க வைக்கும் சிஎஸ்கே? பேச்சுவார்த்தையை தொடங்கிய சென்னை!

சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நெருங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் ரிடென்ஷன் பட்டியல் தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணி தரப்பில் அதிகளவிலான இந்திய வீரர்களை தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் ரிடென்ஷன் பட்டியலை வெளியிடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மெகா ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ipl 2025 csk deepak chahar

இதனால் பெரும்பாலான அணிகள் தரப்பில் அதிகளவிலான இந்திய வீரர்களை தக்க வைக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் கிடைப்பதே அரிதான விஷயமாக தான் இருக்கும். வெளிநாட்டு வீரர்களை எளிதாக சிறிய தொகைக்கு வாங்க முடியும் என்பதால், அதற்கேற்ப மெகா ஏலத்திற்கான திட்டங்கள் செய்யப்படும்.

அந்த வகையில் சிஎஸ்கே அணி தரப்பில் 5 வீரர்களை ரிடென்ஷன் செய்துவிட்டு, ஒரேயொரு ஆர்டிஎம் வாய்ப்புடன் மெகா ஏலத்தை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முதல் வீரராக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரூ.18 கோடிக்கும் தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.14 கோடி இலங்கை வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவை ரிடெய்ன் செய்யவும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய அதிரடி வீரர் சிவம் துபேவை ரூ.11 கோடிக்கும், ரவீந்திர ஜடேஜாவை ரூ.18 கோடிக்கும் தக்க வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அன்-கேப்ட் வீரராக தோனியை ரூ.4 கோடிக்கும், தீபக் சஹரை மீண்டும் ரூ.14 கோடிக்கும் தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் கடந்த மெகா ஏலத்தின் போதே தீபக் சஹர் ரூ.14 கோடிக்கு தான் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார். இதனால் மீண்டும் அவர் ரூ.14 கோடிக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் பதிரானா, சிவம் துபே உள்ளிட்டோர் நிச்சயம் ரூ.15 கோடிக்கு அதிகமாக செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை என்று ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.

Story first published: Wednesday, October 16, 2024, 14:22 [IST]
Other articles published on Oct 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+