Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஜடேஜா-வை வேறு அணிக்கு Trade செய்ய போகிறதா சிஎஸ்கே? முன்னாள் வீரர் சொன்னதை பாருங்க

டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத அளவில் புள்ளி பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு பல காரணம் இருந்தாலும், அனுபவ வீரர் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிய அளவு சாதிக்காதது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் கூட சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இதில் ஜடேஜா வெறும் 1 ரன் மட்டும் தான் எடுத்திருந்தார். ஜடேஜா மட்டும் பேட்டிகள் ஒரு 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் சிஎஸ்கே அணி 200 ரன்கள் குவித்திருக்கும். 2023 ஆம் ஆண்டு சீசன் இறுதிப் போட்டிக்கு பிறகு ஜடேஜா எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

Ravindra Jadeja

2025 ஆம் ஆண்டு சீசனில் தற்போது ஜடேஜா 13 போட்டியில் விளையாடிய 280 ரன்களும், எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு சீசனில் 267 ரன்களும் எட்டு விக்கெட்டுகளில் வீழ்த்தியுள்ள ஜடேஜா 2023 ஆம் ஆண்டு 190 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

2022 சீசனில் 116 ரன்களும், 2021 227 ரன்களும் ஜடேஜா எடுத்திருந்தார். இதேபோன்று பந்துவீச்சில் ஜடேஜா 2023 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டு 20 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அந்த சீசன்தான் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அதன் பிறகு பந்து வீச்சிலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது ஜடேஜாவுக்கு 36 வயது ஆகிறது.

இதனால் ஜடேஜாவை வேறு அணிக்கு டிரேட் செய்ய சிஎஸ்கே முடிவெடுக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர்," ஜடேஜாவை வேறு அணிக்கு மாற்ற சிஎஸ்கே முடிவெடுக்கும் என நினைக்கின்றேன். ஏனென்றால் பிரவீஸ் நம்பர் நான்காவது வீரராக களமிறங்குகிறார். கான்வே, ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல் என மூன்று வீரர்கள் இருக்கிறார்கள்."

"ஐபிஎல் சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஒரு மினி ஏலத்தை நடத்தி சிஎஸ்கே வீரர்களை தேர்வு செய்து விட்டது. என்னை கேட்டால் அடுத்த சீசனுக்கு பிரச்சனை ஆகியோரை சிஎஸ்கே வெளியே அனுப்பிவிட்டு அதற்கு பதில் ஒரு அதிரடி வீரரை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யும். ருதுராஜ் ஏற்கனவே அணியில் இருக்கின்றார். உர்வில் பட்டேலுடன் இன்னொரு ஒரு வீரரை ஏலத்தில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இதைப் போன்று ஒரு ஃபினிஷர் பேட்ஸ்மனை ஏலத்தில் வாங்க வேண்டும். இப்படி இருக்கும்போது ஜடேஜாவை நான்காவது வீரராக களம் இறக்குவது எனக்கு சரியான திட்டமாக தெரியவில்லை" என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 21, 2025, 12:24 [IST]
Other articles published on May 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+