Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: மீண்டும் ஃபிடில்ங்கில் சொதப்பிய சிஎஸ்கே.. அதிரடி வீரருக்கு வாய்ப்பு கொடுத்த பதிரானா

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருவதற்கு கேட்ச்களை அதிகம் விடுவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இன்று ஆர் சி பி அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய ஜேக்கப் போத்தேல் 33 பந்துகளில் 55 ரன்களும், விராட் கோலி 33 பந்துகளில் 62 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்தது. குறிப்பாக பவர் பிளேவில் 71 ரன்கள் ஆர் சி பி அணி விளாசியது.

CSK vs RCB

இந்த சூழலில் ஆட்டத்தின் நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தில் அன்சூல் கம்போஜ் வீசினார். அதனை ஜோக்கப் போத்தல் தூக்கி அடித்தார். அந்த பந்து கேட்ச் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜடேஜா அந்த பந்தை ஓடி சென்று கேட்ச் பிடித்தார். ஆனால் ஜடேஜாவின் கேட்சை தொந்தரவு செய்யும் விதமாக பதிரானா ஓடி வந்தார்.

இதில் ஜடேஜாவும் பதிரானாவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதனால் ஜடேஜா வந்து கேட்ச் பிடித்தும் பதிராணா மீது மோதியதால் பந்து அவர் கையை விட்டு சென்றது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய வாய்ப்பாக ஆர்சிபி அணிக்கு அமைந்தது.அப்போது ஜேக்கப் போத்தேல் வெறும் 28 ரன்கள் தான் எடுத்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு அபாரமாக விளையாடி அவர் 55 ரன்கள் குவித்தார். இதேபோன்று சிஎஸ்கே அணி முக்கியமான கேட்சையும் பவுண்டரிகளையும் பில்டிங்கில் தவறவிடுவது கூடுதல் ரன்களை எதிரணிக்கு தருகிறது. இதனை ஷேஸ் செய்யும்போது சிஎஸ்கே அணி கடுமையாக தடுமாறுகிறது.

இதுதான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பவர் பிளேவில் சிஎஸ்கே அணி மோசமாக செயல்பட்டு ரன்களை வாரிக் குவித்து இருக்கிறது. இதேபோன்று சிஎஸ்கே அணி அதிரடி காட்டினால் மட்டுமே இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வால் வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 3, 2025, 21:21 [IST]
Other articles published on May 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+