Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரர்கள் னா சும்மாவா? ஒட்டுமொத்த இலங்கை அணியும் தடுமாற, தோனி சிஸ்யன்கள் செய்த சம்பவம்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். எந்த வீரர்களை விடுவிக்கலாம் என்பது குறித்து யோசித்து வருகிறது. அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி யாரை தக்க வைத்துக் கொள்ளலாம் யாரை ஆர்டிஎம் கார்டு மூலம் மீண்டும் எடுக்கலாம் என்பது குறித்து யோசித்து வருகிறது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிரானாவை 11 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

wi vs sl ipl 2025 csk

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்கும் பதிரானா, கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். பதிரானாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள மற்ற அணி வீரர்கள் தடுமாறுகின்றனர். இந்த நிலையில் இலங்கை நேற்று வெஸ்ட் இண்டீஸ் உடன் டி20 போட்டி ஒன்றில் விளையாடியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 புள்ளி ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றதால் பரபரப்பாக இருந்தது. இந்த போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் பலரும் தடுமாறினர். ஆனால் சிஎஸ்கே வீரர்கள் மட்டும் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள்.

குறிப்பாக பதிராணா மூன்று புள்ளி ஒரு ஓவரில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 14 ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் மட்டும்தான் சென்றது. இதனால் பதிராணா நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. இதேபோன்று மற்றொரு சிஎஸ்கே வீரரான தீக்சனா நான்கு ஓவர்களில் 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

தீக்சனா ஓவரில் 5 பவுண்டரிகள் மட்டுமே சென்றது. மற்ற வீரர்கள் எல்லாம் இரண்டு ஓவரில் 27 ரன்கள் 4 ஓவரில் 37 ரன்கள் என ரன்களை வாரி வழங்கி இருக்கிறார்கள். இதில் சிஎஸ்கே வீரர்கள் மட்டும் சிறப்பாக விளையாடி ரன்களை கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் தீக்சனாவை சிஎஸ்கே அணி மீண்டும் தேர்வு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Monday, October 14, 2024, 14:02 [IST]
Other articles published on Oct 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+