Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே.. வாய்ப்பு இருக்கிறதா? புள்ளி பட்டியல் நிலவரம்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை எட்டு போட்டியில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 2 வெற்றி மட்டுமே பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணியே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். தற்போது அனைத்து அணிகளும் ஏழு போட்டிகளுக்கு மேல் விளையாடிவிட்டது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் முதல் பகுதி முடிவடைந்துவிட்டது.

CSK Playoff chances

இந்த நிலையில் கிளைமாக்ஸை நோக்கி ஐபிஎல் தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்பதை தற்போது பார்க்கலாம். ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

ஆனால் சிஎஸ்கே அணி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்றிருக்கிறது. இன்னும் சிஎஸ்கே அணிக்கு 6 போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதனால் இந்த ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

இதன் மூலம் இனி வரும் அனைத்து போட்டிகளும் சிஎஸ்கே அணிக்கு வாழ்வா சாவா என்ற கட்டமாக மாறிவிட்டது. அடுத்த மூன்று போட்டிகள் சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமானவை. வரும் வெள்ளிக்கிழமை சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன் பிறகு ஏப்ரல் 30ஆம் தேதி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
இந்த இரண்டு போட்டிகளும் சென்னையில் தான் நடைபெறுகிறது.

அதன் பிறகு மே மூன்றாம் தேதி பெங்களூருவில் ஆர்சிபி அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. சிஎஸ்கே அணியை போல் ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளும் நான்கு புள்ளிகளுடன் முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தற்போது சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இன்னொரு விஷயம் நடக்க வேண்டும்.

அதாவது தற்போது புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இருக்கும் அணி எஞ்சி இருக்க போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். முதல் இரண்டு இடங்கள் இருக்கும் அணி எவ்வளவு அதிகம் வெற்றி பெறுகிறார்களோ, அந்த அளவுக்கு கீழ் வரிசையில் இருக்கும் அணி குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப்க்கு செல்ல முடியும். உதாரணத்திற்கு குஜராத், டெல்லி அணிகள் 20 புள்ளிகளை பெற்றால் சிஎஸ்கே அணி 12 அல்லது 14 புள்ளிகளை பெற்றாலே போதும் என்ற நிலைமை வரும். இதே போல் நமக்கு மேல் நடுவில் இருக்கும் அணிகள் இனி அனைத்து போட்டிகளிலும் தோற்க வேண்டும். எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி, பிளே ஆப்க்கு செல்ல முயற்சி செய்வோம். அதே சமயம் அடுத்த ஆண்டுக்கான அணியை தற்போதே தயார் செய்வோம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 21, 2025, 7:00 [IST]
Other articles published on Apr 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+