சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மற்ற அணிகள் எல்லாம் சுலபமாக 200 ரன்களுக்கு மேல் அடித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது.சிஎஸ்கே அணி வீரர்கள் பவர் பிளேவை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் சிஎஸ்கே அணி வீரர்கள் இன்று விளையாடினர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சை தொட முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் தடவினார்கள். இதே சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் ஓவரில் எதிரணி 21 ரன்கள் எல்லாம் அடித்து இருந்தது.
ஆனால் சிஎஸ்கே அணி 21 ரன்கள் அடிக்க ஐந்து புள்ளி மூன்று ஓவர்கள் எடுத்துக் கொண்டனர். இதில் இரண்டு விக்கெட் வேறு இழந்தது. அப்படி என்றால் சிஎஸ்கே அணி எவ்வளவு மோசமாக விளையாடி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து வீரர் கான்வே 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இரண்டு பவுண்டரிகள் இதில் அடங்கும்.
ஆட்டத்தின் மூன்றாவது புள்ளி ஒரு ஓவரில் மோயின் அலி வீசிய பந்தில் அவர் lbw ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய ராகுல் திருப்பாதி தொடர்ந்து அடிக்க முடியாமல் தடுமாறினார். இதேபோன்று ரச்சின் ரவீந்திராவும் எதற்கு தான் அணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை. பயிற்சியாளர் நியூசிலாந்தை சேர்ந்தவர் என்பதால் கோட்டாவில் நியூசிலாந்து வீரர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரச்சின் ரவீந்திரா, தொடர்ந்து டெஸ்ட் மேட்ச் போல் விளையாடுகிறார். 9 பந்து எதிர்கொண்டு வெறும் நான்கு ரன்கள் மட்டுமே சேர்த்து அவர் ஆட்டம் இழந்தார். இதனால் ரச்சின் ரவீந்திரா அணியை விட்டு துரத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிஎஸ்கே அணி 5 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் சங்கர் பாவம் பார்த்து இரண்டு பவுண்டரிகளை அடித்ததால் பவர் பிளே முடிவில் சிஎஸ்கே அணி இரண்டு விக்கெட் இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.