Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஒரே ஆண்டில் 131% வளர்ச்சி.. ரூ.676.40 கோடியாக உயர்ந்த சிஎஸ்கே வருமானம்.. காரணமே தோனி தான்!

சென்னை: ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே அணியின் வருமானம் ஒரே ஆண்டில் 340 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக கடந்த ஆண்டு ரூ.229.34 கோடியாக இருந்த வருமானம், 2024ல் மொத்தமாக ரூ.676.40 கோடியாக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சிஎஸ்கே அணியின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 15 சீசன்களில் 10 முறை இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறது. அதேபோல் பிளே ஆஃப் சுற்றுக்கு மட்டும் 12 முறை தகுதி பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

ipl 2025 csk ms dhoni

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்று கொண்டார். இதனால் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் தோனி சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார். இதனால் தோனியின் கடைசி சீசனாக இது இருக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்பட்டது. இதனால் தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியுடன் மைதானத்தில் குவிந்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் வருகையை வாழ்க்கையில் ஒருமுறை அனைவரும் பார்த்துவிட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட்டர்கள் பலரும் கூற தொடங்கினர். இதனால் சிஎஸ்கே அணி விளையாட்டும் டிக்கெட் விற்பனை எகிறியது. வழக்கத்திற்கும் அதிகமாக டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டும், ரசிகர்கள் வாங்கினர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வருமானம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் வருமானம் ரூ.292.34 கோடியாக இருந்தது. தற்போது இவை, மொத்தமாக 340 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பாண்டில் சிஎஸ்கே அணியின் வருமானம் ரூ. 676.40 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் சூப்பர்கிங்ஸ் அகாடாமி தொடங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக 9 அகாடமிகள் தொடங்கியுள்ள நிலையில், வெளிநாட்டில் 2 அகாடமியை சிஎஸ்கே அணி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதன் மூலமாக மொத்தமாக 1,100 பேருக்கு கிரிக்கெட் பயிற்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் வழங்கி வருகிறது.

இதன் மூலமாக கடந்த ரூ.2.56 கோடி வருமானம் கிடைத்து வந்த நிலையில், இந்த ஆண்டில் 5.47 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் அகாடமி செயல்பாட்டுக்கு செலவும் ரூ.6.34 கோடியில் இருந்து ரூ.1.61 கோடியாக குறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் அடுத்ததாக அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, லண்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் அகாடமியை தொடங்க பணியை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 7, 2024, 17:35 [IST]
Other articles published on Sep 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+