Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BREAKING - ஐபிஎல் 2025 சீசனில் தோனி விளையாடுகிறார்.. 5 வீரர்களை தக்க வைக்கும் சிஎஸ்கே

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்விதான் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது தோனி இதுவரை தங்களிடம் தன்னுடைய முடிவு குறித்து தெரிவிக்கவில்லை என்று சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியிருந்தார்.

இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் அன்கேப்ட் வீரராக தோனி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பே 5 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு ஒரு வீரரை ஏலத்தின் மூலம் தேர்வு செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ipl 2025 csk ms dhoni 2025

சிஎஸ்கே அணி முதல் வீரராக கேப்டன் ருதுராஜ் தான் தக்க வைக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன. இளம் வீரராக ருதுராஜ் இருந்தாலும் அவர் ஏலத்திற்கு சென்றால் அதிக தொகைக்கு செல்வார் என்பதால் ருத்ராஜ்க்கு இம்முறை 18 கோடி ரூபாய் வழங்க சிஎஸ்கே அணி முடிவு எடுத்திருக்கிறது.

இதனை அடுத்து இரண்டாவது வீரராக ஜடேஜா தேர்வு செய்யப்பட இருக்கிறார். ஜடேஜாவுக்கு 14 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதேபோன்று பெரிதும் எதிர்பார்த்தபடி மூன்றாவது வீரராக சிவம் துபே தேர்வு செய்யப்பட இருக்கிறார். சிவம் துபேக்கு 11 கோடி ரூபாய் சம்பளம் வழங்க சிஎஸ்கே அணி முடிவு எடுத்திருக்கிறது.

இதை அடுத்து நான்காவது வீரராக இலங்கை வீரர் பதிரானாவுக்கு 18 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்திற்கு முன்பே தக்கவைத்துக்கொள்கிறது. இதை அடுத்து ஐந்தாவது வீரராக தோனி நான்கு கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட இருக்கிறார். இதன் மூலம் சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பே 65 கோடிகளை செலவு செய்து விடும்.

இதன் மூலம் ஏலத்தில் 55 கோடி ரூபாய் சிஎஸ்கே அணிக்கு கையிருப்பு இருக்கும். சிஎஸ்கே அணிக்கு ஒரு rtm கார்ட் இருக்கும். அதை வைத்து அவர்கள் கான்வே அல்லது தீபக் சாஹரை வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 43 வயதான தோனி மீண்டும் ஒரு சீசன் சென்னை அணிக்காக விளையாட இருப்பது தமிழக ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைத்திருக்கிறது.

Story first published: Wednesday, October 30, 2024, 19:19 [IST]
Other articles published on Oct 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+