Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியிலிருந்து இவரை அடிச்சி விரட்டுங்க.. எதிர் அணிக்காக விளையாடும் ரச்சின்.. ரசிகர்கள் புகார்

மும்பை: ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருவதற்கு காரணம் தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாமல் இருப்பது தான். குறிப்பாக பவர் பிளேவில் சிஎஸ்கே அணி நடப்பு சீசனின் மிகக் குறைந்த ரன்களை அடித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா தான். இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ரச்சின் வெறும் 191 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும்.

Rachin ravindra

எட்டு போட்டிகளில் நான்கு சிக்சர், 18 பவுண்டரிகளை அடித்து இருக்கிறார். ரச்சின் ரவிந்தராவின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 128 என்ற அளவில் உள்ளது. சராசரி வெறும் 27 என்ற அளவில் தான் இருக்கின்றது. ரச்சின் ரவீந்திரா மும்பை அணிக்கு எதிராக முதல் போட்டியில் 65 ரன்கள் அடித்தார்.அதன் பிறகு ஆர்சிபிக்கு எதிராக 41 ரன்கள் அடித்தார்.

அதன் பின் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஜீரோ, டெல்லி அணிக்கு எதிராக மூன்று ரன்கள், பஞ்சாப் அணிக்கு எதிராக 36 ரன்கள், கொல்கத்தா அணிக்கு எதிராக நான்கு ரன்கள், லக்னோ அளித்ததாக 37 ரன்கள் அடித்துள்ளார். 30 ரன்களுக்கு மேல் ரச்சின் அடித்தாலும் அது மிக குறைந்த வேகத்தில் அடிக்கப்படுகிறது.

டி20 கிரிக்கெட் போட்டி மாறி வரும் நிலையில் இந்த பேட்டிங் கொஞ்சம் கூட சரிப்பட்டு வராது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சிஎஸ்கே அணிக்காக விளையாடாமல் எதிர் அணிக்காக தொடர்ந்து ரச்சின் விளையாடுகிறார். இதனால் ரச்சின் அணியை விட்டு நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மற்ற அணிகள் எல்லாம் அதிரடி காட்டும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போல் பேட்டிங் செய்து வருவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதற்கு காரணம் சிஎஸ்கே அணி நிர்வாகம் தொடக்க வீரர்களை அதிரடி காட்டக் கூடாது என்றும் கிரிக்கெட்டின் உள்ள டெக்ஸ்ட் புக் ஷாட்களை மட்டும் தான் ஆட வேண்டும் என்று கூறுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து தோனியை பேட்டியில் கூறும்போது மற்ற அணிகள் போல் நாங்கள் பேட்டை சுற்றி ஆடி ரன்களை சேர்க்கத் தேவையில்லை என்று கூறி வருகிறார். இதனால் தோனி தவறான யுக்திகளை பயன்படுத்துவதாகவும் வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்காமல் இருப்பதால் தான் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டுவதில்லை என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Sunday, April 20, 2025, 20:59 [IST]
Other articles published on Apr 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+