Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - சிஎஸ்கே அணி உயிரே போனாலும், இந்த வீரர்களை எல்லாம் தேர்வு செய்ய கூடாது..

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வீரர்களை தக்க வைக்க கூடாது. எந்த வீரர்களை ஏலத்தில் வாங்க கூடாது என்று ரசிகர்கள் ஒரு பெரிய பட்டியலையே வெளியிட்டு இருக்கிறார்கள்.

அனைத்து அணி ரசிகர்களும் இந்த வீரர்களை வாங்குங்கள் என்று யோசனை வாங்கி வரும் நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் இப்படி ஒரு புதிய முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் சிஎஸ்கே அணி பெரும்பாலும் மொக்கையான வீரர்களை வாங்குவது தான்.

ipl 2025 csk ms dhoni

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பு எந்த வீரர்களை தக்க வைக்க கூடாது என்று தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் தீபக் சாகர், சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளராக தீபக்சாகர் இருக்கிறார். 32 வயதான தீபக் சாஹர் அண்மைக்காலமாக காயம் அடைந்து ஐபிஎல் போட்டிகள் இருந்து விலகி வருகிறார்.

2018 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக தீபக் சாஹர் விளையாடுகிறார். எனினும் 2024 ஆம் ஆண்டு சீசன் தீபக் சாஹர் வெறும் 8 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டையும், 2023 ஆம் ஆண்டு சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டையும், 2022 ஆம் ஆண்டு சீசன் காயம் காரணமாக முழுமையாக விளையாடாமல் போனார். இதனால் தீபக் சாஹரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஷர்துல் தாக்கூரும் ஆல்ரவுண்டராக அறியப்பட்ட ஷர்துல் தாக்கூர், கடந்த சீசனில் வெறும் ஒன்பது போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். மொத்தமாகவே 21 ரன்கள் தான் அவர் சேர்த்தார். இதனால் ஷர்துல் தாக்கூரையும் விடிவித்துவிட்டு புதிய வீரர்களை தேர்வு செய்ய சிஎஸ்கே அணி முயற்சி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை டேரல் மிச்செல் பிடித்திருக்கிறார். அதிரடி வீரராக அறியப்பட்டாலும், அவர் சிஎஸ்கே வைத்த நம்பிக்கையை காப்பாற்றவில்லை என்று ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனினும் டேரல் மிட்செல் 13 போட்டிகளில் விளையாடி 318 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் சராசரி 28 என்ற அளவில் இருக்கிறது. ஒரு இரண்டு போட்டிகளில் டேரல் மிட்செல் அதிரடியாக விளையாடினாலும் 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதற்கு ஏற்ப விளையாடவில்லை.

Story first published: Wednesday, October 30, 2024, 17:54 [IST]
Other articles published on Oct 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+