Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RR: சிஎஸ்கே ரொம்ப பெரிய தப்பு பண்றாங்க..பிளே ஆஃப் போறதே கஷ்டம்.. கிரிக்கெட் வல்லுனர் வார்னிங்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்சிபிக்கு எதிராக படுதோல்வியை தழுவியது. மேலும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் எப்போதுமே பலமாக இருக்கும். ஆனால் இந்த சீசன் சிஎஸ்கேவில் உள்ள நடுவரிசை வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே வின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்த மைதானத்தில் தற்போது ஆர் சி பி அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகரும் வர்ணனையாளருமான நாணி தெரிவித்துள்ளார்.

CSK

அதனை தற்போது பார்க்கலாம். "சிஎஸ்கே அணியின் பலமே சொந்த மண்ணில் அதிக போட்டிகளில் வெற்றி பெறுவது தான். சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் 7 போட்டிகளில் குறைந்தபட்சம் ஆறு போட்டியிலாவது வெல்ல வேண்டும். தற்போது ஆர்சிபிக்கு எதிராக நாம் தோல்வியை தழுவி விட்டோம்."

"இது தொடர் ஆரம்பத்திலே நடந்து விட்டதால் இதை ஒரு வார்னிங் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். சி எஸ் கே அணியில் மூன்று உலக தர சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் ரன் குவிப்பு சாதகமாக தான் ஆடுகளம் இருந்தது. இதனால் ஆடுகளத்தை மாற்ற வேண்டும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் தடுமாறுவார்கள்."

"இதனால் ஷாம்கரனை நீக்கிவிட்டு கான்வேவை அணிக்குள் கொண்டு வர வேண்டும். கான்வே, ருதுராஜ் ஜோடி மீண்டும் ஓப்பனிங் இறங்கி ரன்கள் குவிக்க வேண்டும்.ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே போன்ற வீரர்கள் சுழற் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு விளையாடுவார்கள். எனவே இந்த மாற்றத்தை சிஎஸ்கே செய்தால் மட்டுமே அவர்களால் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்."

" மேலும் சிஎஸ்கே போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் உண்மையிலேயே, ரசிகர்கள் தானா இல்லை தோனியை பிடிக்கும் என்பதற்காக மைதானத்திற்கு வருகிறார்களா என்று தெரியவில்லை.இது அபாயகரமான சூழ்நிலை ஆகும். சி எஸ் கே வின் உண்மையான ரசிகர்கள் என்றால் தோனியும் ரன் குவிக்க வேண்டும். சிஎஸ்கேவும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். தோனி இறுதியில் பேட்டிங் செய்து இரண்டு சிக்ஸர் அடித்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் சிஎஸ்கே ரசிகர்களை கிடையாது" என்று நாணி தெரிவித்துள்ளார்

Story first published: Sunday, March 30, 2025, 8:00 [IST]
Other articles published on Mar 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+