Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK - பிளமிங் தொடர்பாக வெளியான உண்மை.. அணியை விட்டு நீக்கப்பட வாய்ப்பு..தோல்விக்கு முழு காரணமே இதான்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதற்கு முழு காரணம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் தான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் வீரர்கள் தேர்வு செய்த போது தோனி அதில் தலையிடவே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணியை கட்டமைக்கும் பொறுப்பை முழுக்க முழுக்க ருதுராஜ் எடுத்துக்கொண்டு செய்தார்கள். இதில் சிஎஸ்கே அணி வாங்கிய பல வீரர்கள் காலை வாரி விட்டார்கள். குறிப்பாக தீபக் ஹூடா, ராகுல் திருப்பாதி ஆகியோர் பேட்டிங்கில் சொதப்பி ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.

StePhen Fleming

மேலும் சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா எப்போது அணிக்குள் வந்தாரோ அப்போதிலிருந்தே சிஎஸ்கே அணி வீணாகி விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் பிளமிங் செய்த தவறுதான் சிஎஸ்கே அணியின் இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

பிளமிங் நியூசிலாந்து வீரர் என்பதால் அவருடைய நாட்டைச் சேர்ந்த வீரர்களை அதிக அளவு சிஎஸ்கே அணியில் வாங்கி பிளமிங் குவித்திருக்கிறார். இது பற்றி ஏற்கனவே பல விமர்சனங்கள் எழுந்தது. இதில் ரச்சின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்றாலும் டி20 யில் அவர் தன்னுடைய திறமையை இன்னும் நிரூபிக்கவில்லை.

இதனால் ரச்சின் தொடக்க வீரராக பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அவரை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்திய நிலையில் தன்னுடைய நாட்டுக்காரர் என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்திருக்கிறார். இதேபோன்று சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களின் வாய்ப்பு கொடுக்காமல் தடுத்ததற்கு பிளமிங்கும் ஒரு காரணம் எனத் தெரிகிறது.

தாம் எப்போதுமே அனுபவ வீரர்களை நம்புவேன் என்று பிளமிங் வெளிப்படையாக கூறியிருந்தார். இதனால் தான் சிஎஸ்கே அணியில் உள்ள இளம் வீரர்கள் பிளேயிங் லெவனுக்குள் வர முடியாமல் தவித்து வருகின்றார். மேலும் அனைத்து அணிகளும் காலத்திற்கு ஏற்ப தங்களது திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. 200 ரன்கள் அடித்தால் கூட அதனை சேஸ் செய்யும் நிலை ஏற்பட்டு இருப்பதால் ஒவ்வொரு அணியும் அதிரடி ஆட்டத்தையும் நம்பிக் கொண்டிருக்கிறது.

ஆனால் பிளமிங் இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடி தாங்கள் விக்கெட்டுகளை கையில் வைத்துக் கொண்டு கடைசி ஐந்து ஓவரில் தான் ரன் அடிப்போம் என்று யுத்தியை பயன்படுத்தினார். ஆனால் நடப்பு சீசனில் அவருக்கு அது கொஞ்சம் கூட கை கொடுக்கவில்லை மேலும் அதிரடியாக ஆடும் வீரர்களையும் பிளமிங் தடுத்து நிறுத்தினார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பிளமிங்கை சிஎஸ்கே அணியை விட்டு நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, May 1, 2025, 18:30 [IST]
Other articles published on May 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+