Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் மாற்றம்.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு- விவரம்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. 6வது முறையாக கோப்பையை கைப்பற்றி தோனியை வெற்றியுடன் வழி அனுப்பி வைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. எப்போதுமே புள்ளி பட்டியலில் டாப் இடத்தில் இருக்கும்.

சிஎஸ்கே அணி இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் சிஎஸ்கே அணி ஏலத்தில் நம்பி எடுத்த வீரர்கள் யாரும் சரியான பார்மில் இல்லாததுதான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருக்கும் ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா போன்ற வீரர்கள் பேட்டிங் செய்யவே தடுமாறி வருகிறார்கள்.

CSK

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த ரச்சின் ரவீந்தரா தற்போது ஐபிஎல் தொடரில் ரன் குவிக்க தடுமாறி வருகிறார். இதேபோன்று ஆல் ரவுண்டர் ஜடேஜா நடப்பு சீசனில் ஆறு போட்டியில் விளையாடி மொத்தமாகவே 85 ரன்கள் தான் அடித்திருக்கிறார். பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

இப்படி சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மண்ணை கவ்வுவதால் தான் நமது அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினம் என்பதால் இனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து எதிர்கால அணியை கட்டமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு அணியிலும் பல இளம் வீரர்கள் அதிரடி காட்டி வரும் நிலையில் சிஎஸ்கே அணியில் உள்ள இளம் வீரர்கள் பெஞ்சை தேய்த்து வருவதாக பலரும் குறை கூறுகின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி எஞ்சியிருக்கும் போட்டிகளில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பார்க்கலாம். வன்ஷ் பேடியை அணிக்குள் கொண்டு வர வேண்டும். வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு வழங்கி சிஎஸ்கே அணி பயன்படுத்த வேண்டும். இதுபோன்று மூன்றாவது வீரராக சாயிக் ரசித்தை பயன்படுத்த வேண்டும்.

அண்டர் 19 கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ள சாயிக் ரசித் நல்ல ஃபீல்டரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது வீரராக சிவம் துபேவே தொடர வேண்டும். சிவம் துபேவும் பெரிய அளவில் பார்மில் இல்லை என்றாலும், அவரைத் தவிர தற்போது வேறு வீரர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது வீரராக ஜமி ஓவர்டனை சேர்க்க வேண்டும். அதிரடியாக ஆடக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் என்பதால் அவரை நடுவரிசையில் பயன்படுத்தி ரன்களை சேர்க்க சிஎஸ்கே முயற்சி செய்யலாம். ஆறாவது வீரராக ஜடேஜாவை விளையாட வைக்க வேண்டும். ஜடேஜா தற்போது தடுமாறி வந்தாலும், அவரை தவிர தற்போது வேறு வீரம் இல்லை என்பது சிஎஸ்கேவுக்கு சோகமான செய்தி தான்.

இதனால் ஜடேஜா பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். திடீரென்று அவர் பார்ம்க்கு திரும்பி ரன்களை சேர்த்தால் அது சிஎஸ்கே அணிக்கு நல்லது தான். ஏழாவது வீரராக மகேந்திர சிங் தோனியை பயன்படுத்த வேண்டும். தோனியும் உடல் தகுதி பிரச்சனை காரணமாக பெரிய அளவு பேட்டிங் செய்தது கிடையாது. இருப்பினும் மற்ற வீரர்களை ஒப்பிட்டு பார்த்தால் தோனி நன்றாக தான் விளையாடுகிறார்.

இந்த தருணத்தில் எட்டாவது வீரராக அஸ்வினுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபாலை பயன்படுத்த வேண்டும். ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் நல்ல பார்மில் இருப்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதேபோன்று ஒன்பதாவது வீரராக அன்ஷுல் காம்போஜை சேர்க்க வேண்டும். நல்ல ஆல் ரவுண்டர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

அதேபோன்று பத்தாவது வீரராக சிஎஸ்கே அணியில் சுழற் பந்துவீச்சாளரான நூர் அகமதுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தற்போது உள்ள சிஎஸ்கே அணையின் நூர் அகமது தான். அபாரமாக பந்துவீசி வரும் அவர் 3வது வெளி நாட்டு வீரராக இருக்க வேண்டும். 11 வது வீரராக பதிரானாவை சேர்க்க வேண்டும். பதிரானா முன்பு போல் பெரிய அளவில் பந்து வீசவில்லை என்றாலும் அவர் மீது சிஎஸ்கே அணி 100% நம்பிக்கை வைக்கலாம்.

இந்த தருணத்தில் கலீல் அகமதை சிஎஸ்கே அணி இம்பேக்ட் வீரராக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பேட்டிங் செய்யும்போது சிவம் துபேவும் பந்து வீசும் போது கலில் அகமதும் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். இந்த பிளேயிங் லெவனை தயார் செய்தால் சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பு ஒரு அளவுக்கு இருக்கும். இந்த தருணத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக வெளியில் இருக்கிறார். அவருக்கு பதில் சிஎஸ்கே அணி ஒரு வீரரை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த வீரர் வெளிநாட்டு வீரராக கூட இருக்கலாம். ஏனென்றால் சிஎஸ்கே அணியில் ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடம் எஞ்சி இருக்கிறது. இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி பிரித்விஷா அல்லது பிராவிஸ் போன்ற வீரர்களை தேர்வு செய்யலாம்.

பிரவீஸ் நன்றாக அதிரடியாக விளையாடக்கூடியவர். குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் போற்றக்கூடியவர். இதன் காரணமாக பிரவீஸ் பிளேயிங் லெவனுக்குள் வந்த நடுவரிசை வீரர்கள் களமிறங்கினால், அது சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும். இல்லை சிஎஸ்கே அணியில் பிரித்வி ஷாவை பயன்படுத்தி, ஒருவேளை அவரும் அதிரடி காட்டினால் தொடக்க வீரர் பிரச்சனை தீர்ந்துவிடும். இப்படி சிஎஸ்கே அணியில் பல மாற்றங்களை செய்யலாம். இதேபோன்று ராமகிருஷ்ண கோஸ் என்ற ஆல்ரவுண்டர் வீரரும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

ராமகிருஷ்ண கோஸ் நன்றாக பந்து வீசக்கூடிய வீரராக இருந்தாலும் பேட்டிங்கில் பெரிய ஷாட் ஆடும் திறமை கொண்டிருக்கிறார். இதேபோன்று ஆண்டிரூ சித்தார்த் என்ற ஒரு வீரர் இருக்கிறார். ஆனால் அவருக்கு 18 வயது தான் ஆகிறது. எனினும் அவர் பெரிய ஷாட்களை ஆட மாட்டார் என்று கூறப்படுகிறது. இப்படி பிளேயிங் லெவனை மாற்றினால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் அது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தோல்வியை தழுவினாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததே என்ற ஒரு சந்தோஷம் ரசிகர்களுக்கு இருக்கும். இதனால் தோனி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. நாளை சிஎஸ்கே அணி லக்னோ அணியை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் விளையாடுகிறது.

Story first published: Sunday, April 13, 2025, 18:18 [IST]
Other articles published on Apr 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+