Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - ஓவராக ஆடிய ஜடேஜா.. ஊதியத்தை அதிரடியாக குறைக்கப் போகும் சிஎஸ்கே.. செயல்பாடும் சரியில்லை

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஜடேஜாவின் ஊதியத்தை அதிரடியாக அந்த அணி நிர்வாகம் குறைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜடேஜா அதன் பிறகு இந்திய அணியின் ராக் ஸ்டார் ஆக உருவெடுத்தார்.

கடந்த 2012 ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஜடேஜா விளையாடி வருகிறார். கடந்த மெகா ஏலத்தில் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக தோனி தன்னுடைய ஊதியத்தை குறைத்துக் கொண்டார்.

ipl 2025 ipl retention cricket ms dhoni CSK

இதன் மூலம் ஜடேஜாவின் ஊதியம் 16 கோடி ரூபாயாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜடேஜாவின் ஐபிஎல் செயல்பாடு கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் ஜடேஜா 14 போட்டிகளில் விளையாடி பேட்டிகளில் 267 ரன்கள் பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.

2023 ஆம் ஆண்டில் பேட்டிங்கில் 190 ரன்கள், பந்துவீச்சில் 20 விக்கெட்டுகளும் ஜடேஜா வீழ்த்தி இருந்தார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் பேட்டிங்கில் 116 ரன்களும், பந்துவீச்சில் வெறும் ஐந்து விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில் ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவருடைய செயல்பாடும் முன்பு அளவு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எடுபடவில்லை.

இதனால் ஜடேஜாவின் ஊதியத்தை அதிரடியாக குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நியாயப்படி சிஎஸ்கே அணி ஜடேஜாவை தக்க வைக்க கூட கூடாது. ஆனால் சென்னை அணிக்காக ஜடேஜா இவ்வளவு காலம் விளையாடிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக சிஎஸ்கே ஜடேஜாவை மூன்றாவது அல்லது நான்காவது வீரராக தக்க வைக்க முடிவு செய்யும்.

அப்படி செய்யும் பட்சத்தில் ஜடேஜாவின் ஊதியம் 16 கோடியிலிருந்து பாதியாக குறைத்து எட்டு கோடி ரூபாயாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜடேஜாவுக்கு நிச்சயம் அதிர்ச்சியை கொடுக்கலாம். இதன் காரணமாக அணியை விட்டு வெளியேறும் முடிவை கூட ஜடேஜா எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அணியை விட்டு வெளியேறும் முடிவை கூட ஜடேஜா எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 20, 2024, 12:33 [IST]
Other articles published on Aug 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+