Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அளித்த சிவம் துபே.. நீங்க ஹீரோ சார்

சென்னை: ஐபிஎல் தொடர் பல வீரர்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது மேலும் பல பெயர் தெரியாத வீரர்கள் பல ஊர்களில் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் அப்படி கொண்டாடப்படும் வீரர்கள் ரசிகர்களுக்கு திருப்பி பெரியதாக எதுவும் செய்தது கிடையாது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சிவம் துபே விளக்குகிறார்.சிவம் துபே எப்போதெல்லாம் அதிரடி காட்டுகிறாரோ அப்போதெல்லாம் சிஎஸ்கே அணி வெற்றி பெறும். அந்த வகையில் சிவம் துபேவை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறது.

Shivam Dube

அங்கு தான் இந்த ருசிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட் அசோசியேசன் என்ற சங்கம் சார்பாக விளையாட்டு வீரர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிஎஸ்கே வீரர் சிவம் துபேவும், சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காசி விஸ்வநாதன் பங்கு பெற்றார்.

அப்போது இந்த சங்கம் விளையாட்டு வீரர்களுக்கு 30 ஆயிரம் நிதி உதவி அளித்தது. அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவம் துபே மற்ற எந்த மாநிலத்திலும் இதுபோல் ஒரு பத்திரிகையாளர் சங்கம் விளையாட்டு வீரர்களுக்கு பணம் கொடுத்து நான் பார்த்ததில்லை. ஆனால் இது ஒரு நல்ல விஷயம்.

நான் அணியின் ஹோட்டலில் இருந்தபோது எனக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் இடமிருந்து அழைப்பு வந்தது. இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நான் ஒப்புதல் அளித்தேன். நீங்கள் எல்லாம் சிறந்து விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக நான் ஒரு வீரருக்கு 70 ஆயிரம் ரூபாய் என தலா பத்து வீரர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மொத்தமாக வழங்குகிறேன். இது உங்களுக்கு சிறிய பணமாக தெரியலாம். எனினும் நீங்கள் நாட்டுக்காக பெருமை சேர்க்க வேண்டும் என நான் வாழ்த்துகிறேன் என்று சிவம் துபே கூறினார். சிவம் துபேவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Tuesday, April 22, 2025, 22:26 [IST]
Other articles published on Apr 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+