Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- 7வது தோல்வியை பெற்ற சிஎஸ்கே.. இன்னும் பிளே ஆப்க்கு போக வாய்ப்பு இருக்கு.. எப்படி தெரியுமா?

சென்னை:ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழாவது லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி பெரும் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இனி சிஎஸ்கே அணி விளையாட போகும் அனைத்து ஆட்டமும் நாக் அவுட் ஆட்டம் போல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சிஎஸ்கே அணி கிட்டத்தட்ட தொடரை விட்டு வெளியேறினாலும், பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

IPL Points table

அதற்கு இனி மற்ற அணிகளின் உதவி சிஎஸ்கேவுக்கு தேவைப்படும். அதாவது தற்போது புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் குஜராத், டெல்லி அணிகள் அதிக வெற்றிகளை பெற வேண்டும். தற்போது குஜராத், டெல்லி அணிகள் எட்டு போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி இரண்டு தோல்வி என 12 புள்ளிகள் உடன் முதல் இரண்டு இடத்தில் இருக்கிறது.

இந்த சூழலில் இந்த இரண்டு அணிகளும் எஞ்சி இருக்கும் ஆறு போட்டிகளில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் இரு அணிகளும் 20 புள்ளிகளை தாண்டினால் கீழ் வரிசையில் இருக்கும் அணிக்கு அது சாதகமாக மாறும். இப்படி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அதிக வெற்றியை பெறுவதன் மூலம் சிஎஸ்கே அணி 14 புள்ளிகளைப் பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

இதனால் சிஎஸ்கே அணி எஞ்சியிருக்கும் 5 போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். எனினும் மூன்றாவது நான்காவது ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கும் rcb, மும்பை, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகளும் இனி வரும் போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவ வேண்டும்.

இது நிகழ்ந்தால் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.ஆனால் இதில் ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே நடக்கும் இது நடைபெற வேண்டும் என்றால் முதலில் சிஎஸ்கே அணி எஞ்சியிருக்கும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 25, 2025, 23:53 [IST]
Other articles published on Apr 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+