For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலம் வரலாற்றிலேயே சிஎஸ்கே வாங்கி சொதப்பிய டாப் 5 வீரர்கள்

சென்னை : ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும்தான். இரண்டு அணிகளுமே தலா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் ஒரு அணி சிறந்த விளங்க வேண்டும் என்றால், அது களத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல.

களத்திற்கு வெளியே அணி நிர்வாகம் வீரர்களை எவ்வாறு ஏலத்தில் தேர்வு செய்கிறது. எவ்வாறு அணியை கட்டமைக்கிறது என்பதை பொருட்டு தான் அமைகிறது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

ipl 2025 ipl auction 2025 ipl retention rules chennai super kings


இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கூட ஏலத்தில் பல மெகா தவறுகளை செய்திருக்கிறது. அந்த வகையில் எந்த வீரர்களை அதிக விலை கொடுத்து சிஎஸ்கே வாங்கி அவர்கள் சொதப்பி இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்று அதிக தொகை கொடுத்து வாங்கிய வீரர் என்றால் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தான்.

சென்னை அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக ஸ்டோக்ஸ் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் காயமடைந்து தொடரில் பெரிய அளவில் பங்கேற்காமல் சென்றார். அது மட்டுமல்லாமல் அடுத்த சீசனில் தம் விளையாட மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் ஸ்டோக்ஸ் மீது சென்னை முதலீடு செய்த பதினாறு கோடியே 25 லட்சம் ரூபாய் வீணானது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் கிருஷ்ணப்பா கௌதம்.

அதிரடி சுழற் பந்து வீச்சாளர் என நம்பி கிருஷ்ணப்பா கௌதமை சிஎஸ்கே அணி ஒன்பது கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவர் பெரிய அளவில் சொதப்பி ரசிகர்களை பொறுப்பேற்றினார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் பிளிண்டாப். சிஎஸ்கே அணி பிளிண்டாப்பை 7 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு 2009 ஆம் ஆண்டு எலத்தில் எடுத்தது.

ஆனால் பிளிண்டாப் ஒரு சில போட்டிகள் மட்டுமே விளையாடய நிலையில் காயின் ஏற்பட்டதாக கூறி தொடரிலிருந்து வெளியேறினார். இதனால் சிஎஸ்கே முதலீடு செய்த பணம் வீணானது. இந்த பட்டியலில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் கேதர் ஜாதவ். 7 கோடியே 80 லட்சம் கொடுத்து கேதர் ஜாதவை சிஎஸ்கே வாங்கியது.

ஆனால் அவர் ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு சீசனில் முக்கியமான கட்டத்தில் இறங்கி வந்து பந்தை தடுத்து மட்டை போட்டதால் ஏற்பட்ட வடு ரசிகர்கள் மனதில் இருந்து இன்றும் மாறவில்லை. இந்த பட்டியில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் கிறிஸ் ஜார்டன். சிஎஸ்கே அணி மூன்று கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து இவரை வாங்கியது. ஆனால் இவர் ரன்களை வாரி கொடுத்துதால் தோனி ஒரு சில போட்டிகளில் அவரை அணியிலிருந்து தூக்கி விட்டார்.

Story first published: Saturday, October 5, 2024, 11:51 [IST]
Other articles published on Oct 5, 2024
English summary
IPL 2025 - CSK Top 5 Worst Buy in the Auction ஐபிஎல் ஏலம் வரலாற்றிலேயே சிஎஸ்கே வாங்கி சொதப்பிய டாப் 5 வீரர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+