Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: Fair Play award-க்கான புள்ளி பட்டியலில் முதலிடம் யாருக்கு தெரியுமா?

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அனைவரும் எதிர்பார்ப்பது புள்ளி பட்டியல் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதுதான். ஏனென்றால் அதுதான் முக்கியம். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இதனால் அந்த நான்கு இடங்களை பிடிக்க தான் 10 அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு ஒரு புள்ளி பட்டியலும் இருக்கிறது. அது களத்தில் நன்மதிப்புடன் சரியாக நடந்து கொள்ளும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் பட்டியல் ஆகும். எதிரணி வீரர்களுக்கு மரியாதை கொடுப்பது, நடுவரிடம் சரியாக நடந்து கொள்வது என ஐபிஎல் தொடரில் பேர் பிளே அவார்ட் என்று ஒரு விருது, தொடர் முடிவில் கொடுக்கப்படும்.

IPL Fairplay award

ஒவ்வொரு போட்டியிலும் எந்த அணி சரியாக செயல்படுகிறது என்பதை நிர்ணயித்து நடுவர்கள் இந்த புள்ளியை வழங்குவார்கள். அந்த வகையில் தற்போது பேர்பிளே அவார்டில் எந்த அணி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் குஜராத் அணி இருக்கிறது. 6 போட்டிகளில் விளையாடி 54 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

ஒன்பதாவது இடத்தில் லக்னோ அணியிருக்கிறது. 7 போட்டிகளில் விளையாடி 64 புள்ளிகளை அந்த அணி பெற்றிருக்கிறது. எட்டாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது. 6 போட்டிகளில் விளையாடி 58 புள்ளிகளை பெற்றிருக்கிறது. ஏழாவது இடத்தில் கொல்கத்தா அணி இருக்கிறது. அவர்கள் 7 போட்டிகளில் விளையாடி 68 புள்ளிகளை பெற்றிருக்கிறார்கள். ஆறாவது இடத்தில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

ஆறு போட்டிகளில் விளையாடி 59 புள்ளிகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். ஐந்தாவது இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இருக்கிறது. ஐந்து போட்டியில் விளையாடிய 50 புள்ளிகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். நான்காவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருக்கிறது. 6 போட்டிகளில் விளையாடி 60 புள்ளிகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

மூன்றாவது இடத்தில் ஆர்சிபி அணி இருக்கிறது. அவர்கள் ஆறு போட்டியில் விளையாடிய 63 புள்ளிகளை பெற்றிருக்கிறார்கள். இந்த பட்டியலில் முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. ஏழு போட்டியில் விளையாடிய 74 புள்ளிகளை சிஎஸ்கே அணி பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும், முதல் இடத்தில் இருக்கின்றோம் என சிஎஸ்கே ரசிகர்கள் நெஞ்சை நிமிர்த்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள்.

Story first published: Wednesday, April 16, 2025, 22:23 [IST]
Other articles published on Apr 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+