Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- சிஎஸ்கே என்றால் சும்மாவா! பிராவோவை கொடுத்து முக்கிய நிர்வாகியை KKR-இடம் வாங்கிய தோனி

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை. இந்த சூழலில் 2025 ஆம் ஆண்டு தனது கடைசி தொடரில் தோனி விளையாடிவிட்டு சாம்பியன் பட்டத்தை வாங்க வேண்டும் என்று உத்வேகத்தில் இருக்கிறார்.

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும், முன்னாள் ஆல்ரவுண்டருமான பிராவோ திடீரென்று சிஎஸ்கே அணியை விட்டு விலகினார். இதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக பணிபுரிய உள்ளதாகவும் அவர் கூறினார்.

ipl 2025 csk dj bravo kkr 2025

இது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பிராவோ போன்ற வீரரை எப்படி சிஎஸ்கே வெளியேற அனுமதித்தது என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.ஆனால் தற்போது தான் பிராவோவை சிஎஸ்கே அணி சும்மா அனுப்பவில்லை என்றும் அதற்கு பதில் கொல்கத்தா அணியில் உள்ள ஒரு முக்கிய நிர்வாகியை வாங்கி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிரிக்கெட் ஆலோசகராக ஏ ஆர் ஸ்ரீகாந்த் என்ற நபர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தார். கே கே ஆர் அணிக்கு மட்டும் இல்லாமல் கரீபியன் பிரிமியர் தொடரில் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியின் கிரிக்கெட் ஆலோசராகவும் பணிபுரிந்தார். இவரது பனிக்காலத்தில் டி ஆர் கே அணி மூன்று முறை சிபிஎல் தொடரை கைப்பற்றியது.

அதுமட்டுமில்லாமல் சுனில் நரேன், ஆண்டிரூ ரசூல் போன்ற வீரர்களுடன் பணியாற்றி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் ஆலோசகர் ஆகவும் ஸ்ரீகாந்த் இருந்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு வீரரை தான் தற்போது சிஎஸ்கே அணி தட்டி தூக்கி இருக்கிறது. இதன் மூலம் ஸ்ரீகாந்த் வெஸ்ட் இண்டீஸ் இல் உள்ள பல இளம் வீரர்களை சிஎஸ்கே அணிக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீகாந்தின் வருகையின் மூலம் சிஎஸ்கே வின் ஆலோசனைக் குழு மேலும் பலமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஸ்ரீகாந்த் சிஎஸ்கேவுக்கு மட்டும் பணிபுரியாமல் எஸ் ஏ டி 20 தொடர், எம்.எல்.சி தொடரில் சிஎஸ்கே வாங்கி அணிகளுக்கும் சேர்த்து வீரர்களின் தேர்வு செய்யப் போகிறார். பிராவோவை அனுப்பிவிட்டு கெத்தான ஒரு நபரை தான் சிஎஸ்கே கேகேஆர் அணியிடமிருந்து வாங்கி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

Story first published: Tuesday, October 8, 2024, 10:04 [IST]
Other articles published on Oct 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+