Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு? சிஎஸ்கே போட்ட ட்வீட்டால் ரசிகர்கள் கலக்கம்!

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது சிஎஸ்கே போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை மேலும் கவலை அடைய செய்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராகவும் கேப்டனாகவும் இருந்து 5 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இது தவிர 2 முறை சாம்பியன்ஸ் கோப்பை என பல ரெகார்டுகளை சிஎஸ்கே படைத்திருக்கிறது. இந்த நிலையில் தோனிக்கு தற்போது 43 வயது ஆகிவிட்டதால் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ipl 2025 ms dhoni csk

மேலும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் என்ற விதி இருப்பதால் தோனி வெறும் விக்கெட் கீப்பிங் மட்டும் செய்துவிட்டு பேட்டிங்கில் கடைசி சில பந்துகளை மட்டுமே ஆட முயற்சித்து வந்தார். இந்த நிலையில் ஐபிஎல் மெகா இடம் நடைபெறுவதால் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டு மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தோனி முடிவெடுத்தார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்களை, இந்திய அணிக்காக விளையாடாதவர் என்று கருதப்பட்டு ஊதியத்தை குறைத்துக் கொள்ள சிஎஸ்கே பிசிசிஐயின் முடிவை நாடியது. இதற்கு பிசிசிஐயும் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தோனி அடுத்த சீசனில் கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு வெளியானது.

இந்த சூழலில் தோனி தமக்கு ஏற்பட்டுள்ள மூட்டு வலி காயத்தின் தன்மை குறித்து மருத்துவர்களின் அறிவுறுத்தலை கேட்டு அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. ஆனால் தோனியின் மூட்டு வலி பிரச்சனை தீர்வது போல் தெரியவில்லை. இதனால் தோனி வரும் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்றுவிடுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ட்வீட் போட்டுள்ளது. அதில் மேஜர் மிஸ்ஸிங் என்று தோனியின் ஏழாவது நம்பர் ஜெர்சியை டிவிட்டரில் சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு செய்துள்ளது. இதுதான் தோனி ரசிகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது. ஒருவேளை தோனி அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்பதை தான் சிஎஸ்கே அணி மறைமுகமாக தெரிவித்து இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதனால் தோனி ஓய்வு பெறப்போவதாக சமூக வலைத்தளத்தில் அவர்களுடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த கூட்டம் தோனியால் மட்டுமே தவிர இனி அவ்வளவு பெரிய கூட்டம் வராது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பலரும் தோனி ஓய்வு பெறும் நாளை தங்களால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஒருவேளை தோனி ஓய்வு பெற்று விட்டால் விக்கெட் கீப்பிங் பதவிக்கு யார் வருவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் புதிய வீரரை மெகா ஏலம் மூலம் சிஎஸ்கே அணி தேர்வு செய்யலாம். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 234 போட்டியில் விளையாடியுள்ள தோனி, 469 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்த சீசனில் அவர் 331 ரன்கள் குவித்தால் ஐந்தாயிரம் ரன்களை சிஎஸ்கேவுக்காக தொட வாய்ப்பு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் தோனி 264 போட்டியில் விளையாடி 5243 ரன்கள் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 24 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தோனி 449 ரன்கள் குவித்து இருக்கிறார்.

Story first published: Wednesday, September 11, 2024, 12:00 [IST]
Other articles published on Sep 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+