Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction 2025- போடு! இது தான் டா சிஎஸ்கே.. RTM கார்டை பிளாக்பஸ்டர் வீரருக்கு பயன்படுத்தி அபாரம்

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் முதலில் அமைதி ஏலத்தில் பின்னர் அதிரடியாக செயல்பட்டு அடுத்தடுத்து நான்கு வீரர்களை வாங்கி குவித்து இருக்கிறது. ஏலத்தின் முதல் பாதியில் சிஎஸ்கே அணி வீரர்களை வாங்க முயற்சி செய்தாலும், விலை அதிகமாக சென்றதும் பின்வாங்கியது.

இதனால் சிராஜ், சமி போன்ற வீரர்கள் கிடைக்காமல் போனார்கள். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த சூழலில் சென்னை அணி ஏலத்தின் பிற்பகுதியில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்து டேவோன் கான்வே, ராகுல் திருப்பாதி போன்ற வீரர்களை வாங்கியது.

ipl auction 2025 ipl auction csk ipl

இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ரச்சின் ரவீந்திரா பெயர் வந்ததும் ரச்சின் ரவிந்தரா முதல் சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் எதிர்காலத்திற்கு தேவையான வீரராக விளங்குகிறார். சுழற் பந்துவீச்சுக்கு எதிராக அபாரமாக ரச்சின் ரவீந்திரா செயல்பட்டிருக்கிறார்.

குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரச்சின் ரவிந்திரா அபாரமாக செயல்பட்டுள்ளார். ரச்சின் ரவீந்தரா ஒரு ஆல்ரவுண்டர் என்பதால் அவரை சிஎஸ்கே அணி விடுவிக்க விரும்பவில்லை. இதனால் ரச்சின் ரவீந்தராவை வாங்க சிஎஸ்கே அணி கடுமையாக போராடியது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து ரச்சன் ரவீந்தராவை வாங்க முயற்சித்தது.

அப்போது சிஎஸ்கே அணி யாருமே எதிர்பாராத வகையில் தங்களிடம் இருந்த ஆர் டி எம் காடை பயன்படுத்தியது. இதனை அடுத்து ரச்சின் ரவிந்திராவை விடக்கூடாது என்பதற்காக பஞ்சாப் அணி அவருக்கு நான்கு கோடி ரூபாய் வழங்குவதாக முன் வந்தது. எனினும் ஆர் டி எம் கார்டை வைத்து அதே பணத்தை நாங்கள் எடுத்து தருகிறோம் என்று கூறி ரச்சன் ரவீந்தராவை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கிவிட்டது.

இதன் மூலம் சிஎஸ்கே அணி தங்களுடைய பழைய ஃபார்முலாவான ஏற்கனவே விளையாடிய வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுத்து அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. மாலை 7 மணி வரையில் சிஎஸ்கே அணி அஸ்வின்,கான்வே, ரச்சின் ரவிந்தரா, ராகுல் திருப்பாதி ஆகியோர்களை ஏலத்தில் எடுத்திருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணியின் வீரர்கள் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. சிஎஸ்கே அணியிடம் தற்போது 31 கோடியே 60 லட்சம் பணம் எஞ்சி இருக்கிறது.

Story first published: Sunday, November 24, 2024, 19:34 [IST]
Other articles published on Nov 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+