For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2025.. முகேஷ் சவுத்திரியை களமிறக்கிய சிஎஸ்கே.. ஒரே ஓவரில் சென்ற 19 ரன்கள்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி இன்று முக்கியமான லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. விளையாடிய 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் தோல்வியை தழுவி விட்டது. இதனால் எஞ்சி இருக்கும் 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

இதனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தங்களுடைய பழைய பார்மை மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் இன்று கான்வே மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். இந்த நிலையில் கலீல் அகமது வீசிய முதல் ஓவர் சிஎஸ்கேவுக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.

CSK vs DC

முதல் ஓவரின் கடைசி பந்திலே ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து முதல் ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே சென்ற நிலையில் ஒரு விக்கெட் விழுந்தது.இதன்பிறகு முகேஷ் சவுத்ரி சிஎஸ்கேவுக்காக பல நாள் கழித்து களமிறங்கினார். சவுத்ரி பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய ஓவரில் டெல்லி அணி பொளந்தது. குறிப்பாக அபிஷேக் போரெல் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசினார். இதனால் இரண்டாவது ஓவரில் மட்டும் 19 ரன்கள் சென்றது. இது டெல்லி அணியின் பவர் பிளே ஸ்கோரை முயற்சி செய்தது.

இதை அடுத்து மீண்டும் கலீல் அகமத் கட்டுக்கோப்பாக பந்து வீசி மூன்றாவது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். முதல் ஓவரில் 19 ரன்களை சவுத்ரி விட்டுக் கொடுத்தாலும், இரண்டாவது ஓவரில் ஓரளவுக்கு நன்றாகவே செயல்பட்டார். எனினும் முக்கியமான இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே சென்றது.

ஒரு கட்டத்தில் பவர் பிளே முடிவில் சிஎஸ்கே அணி 51 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருக்கிறது. ஆடுகளம் போட்டி செல்ல செல்ல தோய்வாக மாற வாய்ப்பு இருக்கிறது. இதனால் டெல்லி அணியை குறைந்த இலக்கில் சுருட்டினால் மட்டுமே சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியும்.

Story first published: Saturday, April 5, 2025, 16:28 [IST]
Other articles published on Apr 5, 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+