IPL 2025: சுயநலமாக மாறிவிட்டாரா சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்? 3வது வீரராக களமிறங்க உண்மையான காரணம் இதான்
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடரில் சிஎஸ்கே அணி தாங்கள் விளையாடிய முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருக்கிறது. முதலில் விளையாடிய மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்த நிலையில், சிஎஸ்கே அணி 19 புள்ளி ஒரு ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றிய இலக்கை சிஎஸ்கே அணி எட்டியது.
இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நம்பர் மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடினார். சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டு சீசன் ருதுராஜ் தொடக்க வீரராக விளையாடி அதிக ரன்கள் குவித்தார்.

தற்போது மூன்றாவது வீரராக களமிறங்குவது சிஎஸ்கே அணிக்கு பாதகத்தையே அதிகம் கொடுக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்திருந்த ருதுராஜ், அணியின் பேலன்ஸ்க்காக தான் நான் மூன்றாவது வீரராக களமிறங்கினேன் என்று கூறியிருந்தார்.
எனினும் ருதுராஜின் இந்த முடிவுக்கு உண்மையான காரணம் இது கிடையாது. இதில் ஒரு தனிப்பட்ட சுயநலமான முடிவு ஒளிந்து இருக்கிறது என்பதுதான் உண்மை. அதாவது தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்க ருதுராஜ் போராடி வருகிறார்.ஏற்கனவே சர்வதேச டி20போட்டியிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கிறார். இந்த இடத்திற்கு தற்போது திலக் வர்மா, சூரியகுமார் ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.
டி20 அணியில் தொடக்க வீரர் இடத்திற்கு பல பேர் போட்டியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் ருதுராஜ், விராட் கோலி இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதற்காக தான் தற்போது ஐபிஎல் போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறங்கி வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மூன்றாவது வீரராக விளையாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினால் விராட் கோலி இடம் தமக்கு கிடைத்துவிடும் என அவர் எதிர்பார்க்கிறார்.
இதனால் தான் ராகுல் திருப்பாதியை தொடக்க வீரராக களம் இறக்கிவிட்டு ருதுராஜ் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் ருதுராஜ் மூன்றாவது வீரராக களமிறங்கி 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதனால் ருதுராஜ் இனி வரும் ஆட்டங்களில் மூன்றாவது வீரராக தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் ருதுராஜ் ஒபனிங்கில் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications