Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- சிஎஸ்கே அணியில் மிகப் பெரிய பிரச்சினை இருக்கு..பேட்டிங் வரிசையால் ஆச்சரியம்- ஆகாஷ் சோப்ரா

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று கடந்த ஆண்டு அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகப்பெரிய பிரச்சனை இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இன்று ஆர் சி பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி குறித்து பார்க்க வேண்டும் என்றால் எனக்கு இந்தக் கேள்வி முதலில் எழுகிறது.

CSK vs RCB

ராகுல் திருப்பாதி ஏன் சிஎஸ்கே அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்கினார். அதை பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் ராகுல் திருப்பாதி பேட்டிங் செய்ய வந்தது உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை.

ராகுல் திருப்பாதி மும்பை அணிக்கு எதிரான போட்டிகள் சரியாக விளையாடவில்லை. எனினும் சிஎஸ்கே அணி ஒரு போட்டியை பார்த்து எந்த ஒரு முடிவையும் எடுக்காது. அவர்கள் தொடர்ந்து வாய்ப்பு அளிப்பார்கள். எனவே ராகுல் திருப்பாதி தொடக்க வீரராக இன்னும் சில போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது.

இதன் மூலம் ருதுராஜ் மூன்றாவது வீரராக களம் இறங்குகிறார். இதற்கு பின்னால் இந்த ஒரு திட்டம் தான் இருக்கும். அது என்னவென்றால் 20 ஓவர் முழுவதும் ஒன்று ருதுராஜ் விளையாட வேண்டும். இல்லை அவர் ஆட்டம் இழந்து விட்டால் ரச்சின் ரவிந்த்ரா பேட்டிங் செய்ய வேண்டும். அதேபோன்று சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய பிரச்சனை நடுவரிசை வீரர்கள் தான்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே, தீபக் ஹூடா ஷாம்கரன் ஆகியோர் நான்கிலிருந்து ஆறாவது வீரர்கள் வரை களமிறங்கினார்கள். ஆனால் மூன்று பேருமே சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார்கள். நடுவரிசையில் மூன்று வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தால் அது சென்னை அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும். சென்னை அணிக்கு நெருக்கடியை கையாண்டு பழக்கம் இல்லை.

ஏனென்றால் அவர்கள் நெருக்கடிக்கு ஆளானதே கிடையாது. சொந்த மண்ணில் எப்போதும் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். ஆனால் மும்பை அணிக்கு எதிரான சிறிய இலக்கை செய்யும் போது தடுமாறி விட்டார்கள். எனினும் இறுதியில் வெற்றி பெற்றாலும் விக்னேஷ் புதூர் பந்து வீசும் போது சிஎஸ்கே அணி தடுமாறியது. எனவே இந்த மூன்று வீரர்களின் குறைந்தபட்சம் இரண்டு அல்லது ஒருவராவது இன்றைய ஆட்டத்தில் ரன்கள் குவித்தே ஆக வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Friday, March 28, 2025, 14:39 [IST]
Other articles published on Mar 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+