Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RCB: சிஎஸ்கே செய்யும் முட்டாள் தனம்.. இது தொடர்ந்தால், பிளே ஆப்க்கு கூட போக முடியாது

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர் சி பி அணிக்கு எதிராக பேட்டிங்கில் தடுமாறியது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த சி எஸ் கே அணி ஆர் சி பி அணியை 196 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இதை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

தொடக்க வீரராக களம் இறங்கிய ராகுல் திருப்பாதி 5 ரன்களிலும், ருதுராஜ், தீபக் ஹூடா நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் சிஎஸ்கே அணி 26 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

CSK vs RCB

சிஎஸ்கே அணி பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய சொதப்பலான காரியத்தை செய்கிறது.கேப்டன் ருதுராஜ் தொடக்க வீரராக அபாரமாக விளையாடி வந்த நிலையில், அவரை எதற்கு மூன்றாவது வீரராக அனுப்ப வேண்டும் என்பதை ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய தீபக் ஹூடாவை எதற்கு சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்று கேள்வியும் எழுந்துள்ளது.

ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா போன்றவர்களை ஏலத்தில் எடுத்த போதே சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் அண்மையில் இருவரும் நல்ல பார்மில் கூட இல்லை. இப்படி இருக்கும்போது எதற்காக இந்த வீரர்களை சிஎஸ்கே அணி பிளேயிங் இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியதற்கு ருதுராஜ் மூன்றாவது வீரராக களமிறங்கியதும், கான்வே காயம் காரணமாக இடம்பெறாததும் தான் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

இதனால் சிஎஸ்கே அணி தங்களுடைய வெற்றிகரமான ஃபார்முலாவை மாற்றாமல் கான்வேயும், ருதுராஜ்ஜையும் தொடக்க வீரராக களம் இறக்கி விட்டு ரச்சின் ரவீந்திரா வீராவை மூன்றாவது வீரராக விளையாட வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே போல் ஒரு பேட்டிங் வரிசையை தொடர்ந்து சி எஸ் கே அணி பயன்படுத்தினால் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாது என்றும் ரசிகர்கள் சாடையிருக்கின்றனர்.

Story first published: Friday, March 28, 2025, 22:19 [IST]
Other articles published on Mar 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+