Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK ரசிகர்கள் முன் வென்றது மகிழ்ச்சி.. இந்த வெற்றி எங்களுக்கு ஸ்பெஷல்.. RCB கேப்டன் ரஜத் பட்டிதார்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷல் ஆனது என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இந்த போட்டியை பற்றி நான் பேச வேண்டும் என்றால் முதலில் இந்த ஆடுகளத்தில் நாங்கள் எடுத்த ஸ்கோர் மிகவும் சிறப்பானது.

Rajat Patidar

ஏனென்றால் பந்து கொஞ்சம் நின்று வந்தது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்ப்பது என்பது கடினமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் பவுண்டரி சிக்ஸர் அடிப்பது கடினமாக உள்ளது. சென்னை ரசிகர்கள் அவர்களுடைய அணிக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுப்பார்கள். அவர்கள் முன் இந்த வெற்றியை நாங்கள் பெற்று இருப்பது ஸ்பெஷலானதாக நான் கருதுகின்றேன்.

நாங்கள் 200 ரன்களை கடக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்த இலக்கை இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது சேஸ் செய்வது கடினம் என்று எனக்கு நன்றாக தெரியும். நான் களத்தில் நிற்கும் வரை என்னுடைய குறிக்கோள் தெளிவாக இருந்தது. இதன் காரணமாக ஒவ்வொரு பந்தையும் நான் நன்றாக பயன்படுத்தி ரன்கள் சேர்க்க விரும்பினேன்.

ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் நான் இன்னிங்ஸ் தொடக்கத்திலே சுழற் சுழற் பந்துவீச்சை அதிக அளவு பயன்படுத்தினேன். குறிப்பாக லிவிங்ஸ்டோன் நான்கு ஓவர்களை வீசி அபாரமாக செயல்பட்டார். இதேபோன்று ஹேசல்வுட் ஆட்டத்தையே திருப்பும் அளவுக்கு பந்து வீச்சை வெளி கொண்டு வந்தார்.

முதல் ஆறு ஓவரிலே நாங்கள் இரண்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. இதை பயன்படுத்தி நாங்கள் விக்கெட்டை எடுத்தோம் என்று ரஜத் பட்டிதார் கூறினார். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், இது ஒன்றும் மிகப்பெரிய தோல்வி கிடையாது என்று கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Story first published: Saturday, March 29, 2025, 6:30 [IST]
Other articles published on Mar 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+