For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK vs RCB: சிஎஸ்கேவின் கோட்டை சேப்பாக்கம்.. ஆர்சிபிக்கு கடும் கவால் காத்திருக்கு.. வாட்சன் வார்னிங்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை ஆர்சிபி அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரு அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. இந்த சூழலில் சென்னையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

CSK vs RCB

வாட்சன் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி என இரண்டு அணிகளுக்கும் விளையாடி இருக்கிறார். ஆனால் ஆர் சி பி அணியில் இருந்ததைவிட சிஎஸ்கே அணிக்கு வந்தபோதுதான் அவருடைய செயல்பாடு அபாரமாக இருந்தது. மேலும் ரசிகர்களால் அதிக அளவு கொண்டாடப்பட்டார். இந்த நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள வாட்சன், சேப்பாக்கம் மைதானத்தில் வந்து விளையாடுவது என்பது ஆர் சி பி அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

ஏனென்றால் சிஎஸ்கே அணியில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் இருக்கிறார்கள். சிஎஸ்கே அணியை எதிர்கொள்வதற்கு ஆர்சிபி அணி தங்களுடைய அணியில் மாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கே அணியின் பலத்தை எதிர்கொள்ள முடியும். நான் சொல்வதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சேப்பாக்கம் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டை ஆக இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் உள்ள வீரர்களை பாருங்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதற்கு என தனியே ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்கள். மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியில் விளையாடிய மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பாருங்கள் அஸ்வின் ஜடேஜா மற்றும் நூர் அகமத் இந்த மூன்று வீரர்களுமே சேப்பாக்கம் மைதானத்தில் அபாரமாக செயல்படுவார்கள்.

அதுவும் நூர் அஹமத் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முதல் போட்டியிடையே அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். இது அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தங்களுக்கு விக்கெட் எடுக்கக்கூடிய வீரராக நூர் அகமது இருக்கிறார் என்பதை சிஎஸ்கே புரிந்து கொண்டு இருக்கிறது என்று வாட்சன் பாராட்டியுள்ளார்.

Story first published: Thursday, March 27, 2025, 13:05 [IST]
Other articles published on Mar 27, 2025
English summary
IPL 2025 CSK vs RCB- Chepauk In Fortress for CSK says Shane watson
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+