For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025- உங்க 2 பேரையும் சிஎஸ்கே அணியில் சேர்த்ததே தப்பு.. சாம் கரண், தீபா ஹூடா சுத்த வேஸ்ட்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மற்ற அணிகள் எல்லாம் 200 ரன்களுக்கு மேல் சர்வசாதாரணமாக அடித்து வரும் நிலையில் சிஎஸ்கே மட்டும் டி20 போட்டியை டெஸ்ட் இன்னிங்ஸ் போல் விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பாராட்டும் வகையில் இருந்தாலும், சிஎஸ்கே அணியின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது.

முதல் போட்டியில் ரச்சன் ரவீந்திரா ஆகியோர் அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றிய நிலையில் இன்று ஒட்டுமொத்த அணியும் சரிவை நோக்கி சென்றிருக்கிறது. குறிப்பாக சிஎஸ்கே அணியில் ஷாம் கரன் தீபக் ஹூடா போன்ற வீரர்களை நடுவரிசையில் களம் இறக்குவது மிகப்பெரிய சொதப்பலாக பார்க்கப்படுகிறது.

CSK batting

சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒரு கெட்ட பழக்கமே வீரர்கள் எவ்வளவு மோசமாக விளையாடினாலும், அவர்களுக்கு குறைந்தபட்சம் ஏழு முதல் 10 போட்டிகள் வரை வாய்ப்பு வழங்குவார்கள்.சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கழுவி ஊற்றினால் மட்டுமே வேறு வீரருக்கு வாய்ப்பு தருவார்கள். கேதர் ஜாதவ்க்கே அணியில் அவ்வளவு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது தீபக் ஹூடாவுக்கும் சாம்கரனுக்கும் ராகுல் திருப்பாதிக்கும் சிஎஸ்கே இன்னும் சில போட்டிகளில் வாய்ப்பு வழங்கும் என்பதே ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.

அப்படி மட்டும் நடந்தால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றை மறந்து விட வேண்டியதுதான். சிஎஸ்கே அணி பேட்டிங்கில் மாற்றம் செய்யாத வரையில், இந்த பேட்டிங் சொதப்பல் தொடரும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ஷாம் கரனை நீக்கிவிட்டு அவருக்கு பதில் கான்வே அணியில் சேர்க்க வேண்டும் என்பதை சிஎஸ்கே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

ஷாம்கரன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டுமே சொதப்புவதால் அவருக்கு பதில் கான்வே சேர்த்து தொடக்க வீரராக ருதுராஜ் உடன் களமிறங்க வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதேபோன்று தீபக் ஹூடாவுக்கு பதில் ஷாயிக் ரசித் அல்லது விஜய் சங்கர் போன்ற வீரர்களையாவது சேர்க்க வேண்டும் என்பதை ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதுவும் இல்லை என்றால் தோனி அல்லது அஸ்வினையாவது நடுவரிசையில் களமிறக்குங்கள் என்று சிஎஸ்கே ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Story first published: Friday, March 28, 2025, 22:53 [IST]
Other articles published on Mar 28, 2025
English summary
IPL 2025 CSK vs RCB- Fans slams Sam curran and Deepak Hooda is unfit to play in T20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+