Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RCB: இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் அதிக வெற்றிகள் பெற்றது யார்?

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தில், ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருக்க முடியும்.

ஆனால் rcb-க்கு எதிரான அந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் அளவுக்கு மீறி கொண்டாடினர்கள். இது சிஎஸ்கே ரசிகர்களை கடுப்படையை செய்தது. இதற்கு பழி தீர்க்கும் விதமாக நாளை நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை சென்னை ரசிகர்களின் விருப்பமாக இருக்கின்றது.

CSK vs RCB

இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் தங்களுக்குள் 33 முறை மோதி இருக்கிறார்கள். இந்த 33 போட்டிகளில் சிஎஸ்கே அணி தான் 21 முறை வெற்றியை பெற்றிருக்கிறது. பெங்களூர் அணி 11 முறை வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்தாகி இருக்கிறது.

ஆர் சி பி அணிக்கு சேப்பாக்கம் மைதானம் ராசியே இல்லாத ஒரு மைதானமாக இருக்கிறது. ஏனென்றால் கடைசியாக ஆர் சி பி அணி 2008 ஆம் ஆண்டு தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி இருக்கிறது. அதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் ஒரு முறை கூட ஆர்சிபி அணி சிஎஸ்கேவை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியது கிடையாது. இதனால் 16 ஆண்டு கால சோகம் தற்போது வரை தொடர்கிறது.

இதனை முடிவுக்கு கொண்டுவர ரஜத் பட்டிதார், விராட் கோலி ஆகியோர் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்று இந்த சீசனில் பலம் வாய்ந்த ஒரு அணியாக விளங்குகிறது. இதேபோன்று சிஎஸ்கே அணியும் மும்பைக்கு எதிராக வெற்றியை பெற்றிருக்கிறது.

சிஎஸ்கே அணியில் திறமை வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆர் சி பி அணியின் பேட்ஸ்மேன்களும், சிஎஸ்கே அணியின் சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை சிறப்பான ஒரு போட்டி இருக்கிறது .இதில் யார் சிறப்பாக செயல்படுவார்களோ அவர்களை வெற்றியை பெறுவார்கள். கடந்த முறை சிஎஸ்கே ரசிகர்கள் மீது செய்த அடாவடி தனத்தித்கு இம்முறை மன்னின் மைந்தனான அஸ்வின் பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, March 27, 2025, 12:01 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+