Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025-RCB அணியில் இந்த 2 வீரர்களும் மிகப் பெரிய ஆபத்து தருவார்கள்..முன்னாள் சிஎஸ்கே வீரர் இர்பான்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மிகவும் முக்கிய வாய்ந்த ஆட்டமாக ஆர்சிபி, சிஎஸ்கே மோதும் போட்டி பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் பல வகைகள் இருக்கின்றன. கடைசியாக இரு அணிகளும் ஓரும்போது சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி அடுத்து அந்த அணி ரசிகர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டனர்.

இதற்கு சிஎஸ்கே பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் rcb அணி தற்போது பலம் வாய்ந்த அணியாக இருப்பதாகவும், இதில் இரண்டு வீரர்கள் எதிரணிக்கு படும் ஆபத்தை கொடுப்பார்கள் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

CSK vs RCB

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஆர்சிபி அணியில் இம்முறை பேட்டிங் பலமாக இருக்கிறது. லிவிங்ஸ்டோன் மற்றும் டீம் டேவிட் என இரண்டு அதிரடி வீரர்களை ஆர் சி பி அணி சேர்த்திருக்கிறார்கள். இதற்கு முன்பு டிவில்லியர்ஸ் அல்லது மேக்ஸ்வெல் ஆகியோர் இறுதியில் இருப்பார்கள். அவர்களை தவிர பேட்டிங் வரிசையில் வேறு எந்த வீரர்களும் சோபிக்க மாட்டார்கள்.

தற்போது லிவிங்ஸ்டோன் மற்றும் டிம் டேவிட் இருவரும் இணைந்து பேட்டிங் விளையாடினால் எதிரணி கதி என்ன ஆகும் என பார்த்துக் கொள்ளுங்கள். பந்தும் ஆடுகளத்தில் நின்று வருவதில்லை. இதனால் இந்த இரண்டு வீரர்களும் எதிரணிக்கு ஆபத்தை கொடுப்பார்கள் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் அணி குறித்து பேசிய இர்ஃபான் பதான் தற்போது சன்ரைசர்ஸ் அணி நல்ல வீரர்களை அடங்கிய அணியாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.முஹம்மது சமி புது பந்தில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொறுத்து அந்த அணியின் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் இர்பான் பதான் கூறியுள்ளார்.நடப்பு சீசனில் பஞ்சாப் அணிதான் அனைவராலும் கவனிக்கப்படும் அணியாக விளங்கும் என்றும் இர்பான் பதான் கூறியுள்ளார்.

பலரும் தற்போது பஞ்சாப் அணியை பற்றி பேசுவதில்லை என்றும் ஆனால் அந்த அணி நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்றும் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, March 27, 2025, 17:57 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+