Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RCB போட்டிகளில் டாப் 3 அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் குவித்த வீரர்கள் யார்?

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையிலான லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் மோதுகிறது என்றாலே இரு அணி ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் போர் புரியும் அளவுக்கு கருத்துக்களை பரிமாறி கொள்வார்கள்.

மேலும் சமூக வலைத்தளத்தில் இரு அணிகள் பற்றியும் டிரோல்கள் அதிக அளவு இருக்கும். இந்த வகையில் இரு அணிகளும் 33 முறை மோதி இருக்கிறார்கள். இதில் சிஎஸ்கே அணி 21 முறையும், ஆர்சிபி அணி 11 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.

CSK vs RCB

ஒரு போட்டி ரத்தாகி இருக்கிறது. இந்த தருணத்தில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் விராட் கோலி தான் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி சிஎஸ்கேவுக்கு எதிராக 1053 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருக்கிறார். தோனி ஆர்சிபிக்கு எதிராக 765 ரன்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா இருக்கின்றார். ரெய்னா 616 ரன்கள் அடித்துள்ளார்.

அதேபோன்று இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜடேஜா முதலிடத்தில் இருக்கிறார். ஜடேஜா 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று இரண்டாவது இடத்தில் 17 விக்கெட்களுடன் பிராவோவும், மூன்றாவது இடத்தில் 15 விக்கெட்டுகளுடன் அல்பி மார்ககலும் உள்ளனர்.

இந்த இரு அணிகளும் மோதும் போது விராட் கோலியும் தோனியும் அபாரமாக விளையாடி இருக்கிறார்கள். இதனால் இம்முறை மீண்டும் இது அனைவரும் மோதும் போது இந்த இரண்டு பேர்களும் பட்டையை கிளப்புவார்களா என்று எதிர்பார்ப்பு ரசிகன் மத்தியில் இருந்துள்ளது.

Story first published: Thursday, March 27, 2025, 18:20 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+