Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RCB: சிஎஸ்கேக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. அணிக்குள் வந்த பதிரானா.. ருதுராஜ் வைத்த டிவிஸ்ட்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஆர்சிபி அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தை விட இது கொஞ்சம் நல்ல ஆடுகளமாக காட்சியளிக்கிறது. ஆர் சி பி அணி எவ்வளவு இலக்கை நிர்ணிக்கிறார்களோ, அதனை ஷேஸ் செய்ய நாங்கள் முயற்சி செய்வோம்.

CSK vs RCB

சென்னையில் தற்போது பெரிய அளவு பனிப்பொழிவு இல்லை. எனினும் பனிப்பொழிவு எப்போது இருக்கும் இருக்காது என்பதை நம்மால் கணிக்க முடியாது. இது நமது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே நாங்கள் அனைத்திற்கும் தயாராக திட்டம் போட்டு வைத்திருக்கின்றோம். எங்கள் அணியில் பில்டிங் கொஞ்சம் குறையாக இருக்கிறது.

அதை நாங்கள் முன்னேற்ற முயற்சி செய்வோம். எங்கள் அணியில் இன்று பதிரானா வருகிறார். அவருக்கு பதில் நாதன் எல்லீஷ் வெளியே செல்கிறார் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய ஆர் சி பி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், நாங்களும் முதலில் பந்து வீச தான் நினைத்தோம். ஏனென்றால் ஆடுகளம் கடினமாக இருக்கிறது.

எனினும் முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய வித்தியாசம் எதுவும் ஏற்படாது என நினைக்கிறேன். எங்களுடைய சிறந்த ஆட்டத்தை ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற தொடரில் வெற்றி பெற முடியும். எங்களுடைய பௌலிங் படை கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்கள்.

இம்முறையும் அதேபோல் ஒரு செயல்பாடு வெளிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன். சி எஸ் கேழ் ஆர் சி பி அணிகள் மோதுவது எப்போதுமே ஒரு சிறந்த ஆட்டமாக இருக்கும். இரு அணிகளின் ரசிகர்களுமே ஆதரவு அளிப்பார்கள். எங்களது அணியில் இன்று ராசிக்கிற்கு பதிலாக புவனேஸ்வர் அணிக்கு திரும்பி இருக்கிறார் என்று ரஜத் பட்டிதார் கூறியுள்ளார்.

Story first published: Friday, March 28, 2025, 19:22 [IST]
Other articles published on Mar 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+