CSK vs RCB: கடைசி ஓவரில் சாம் கரன் செய்த சம்பவம்.. ஆர்சிபி பெரிய ஸ்கோர் அடிக்க காரணமே இதுதான்
சென்னை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஃபினிஷர் டிம் டேவிட் ஆடிய அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி மிகப்பெரிய இலக்கை பெற்றது. சாம் கரன் வீசிய கடைசி ஓவர் சிஎஸ்கே அணிக்கு பாதகமாக அமைந்தது.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய முதல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிரடியாக ஆடியது.

விராட் கோலி மட்டுமே அந்த அணியில் நிதானமாக ஆடி இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை விளாசித் தள்ளினர். பிலிப்ஸ் சால்ட் 16 பந்துகளில் 32 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 14 பந்துகளில் 27 ரன்களையும், கேப்டன் ரஜத் படிதார் 32 பந்துகளில் 51 ரன்களையும், ஜிதேஷ் சர்மா 8 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்திருந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19 ஓவர்களில் 177 ரன்களை எடுத்து ஏழு விக்கெட்களை இழந்திருந்தது. கடைசி ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் இருந்தால் சிஎஸ்கே அணிக்கு எட்டக்கூடிய இலக்கு நிர்ணயிக்கப்படும் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் கடைசி ஓவரை சாம் கரன் துல்லியமாக வீசவில்லை. அதை பயன்படுத்திய டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்ததால் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை சேர்த்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது.
டிம் டேவிட் 8 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே அணிக்கு 197 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
செய்தி சுருக்கம்:
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஃபினிஷர் டிம் டேவிட் அதிரடியாக ஆடினார்.
- சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 197 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.
- சாம் கரன் வீசிய கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார்.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
- டிம் டேவிட் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.


Click it and Unblock the Notifications