கவுகாத்தி : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கவுஹாத்தியில் மாலை ஏழு முப்பது மணிக்கு நடைபெறுகிறது. சிஎஸ்கே அணி ஆர்சிபி இடம் படுதோல்வியை தழுவிய நிலையில், ஓய்வே இல்லாமல் தற்போது சென்னையிலிருந்து கவுகாத்தி வரை பயணம் செய்து இருக்கிறது.
கவுகாத்தி ஆடுகளத்தில் பயிற்சி செய்யக்கூட சிஎஸ்கே வீரர்களுக்கு நேரமில்லை. இந்த தருணத்தில் ராஜஸ்தான் அணியும் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருப்பதால் முதல் வெற்றியை பெறுவதற்காக அந்த அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.

இந்த தருணத்தில் சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான கான்வே பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவரப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஷாம் கரன் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று அஸ்வின் பிளேயிங் லெவனில் இருந்தால் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். ஆனால் கவுஹாத்தி ஆடுகளத்திற்கு அது தேவையில்லை என தெரிகிறது.
இதன் காரணமாக அஸ்வின் நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது. ஆனால் அஸ்வின் ராஜஸ்தான் அணிக்காக தான் ஏற்கனவே விளையாடி இருக்கிறார். இதனால் அந்த அணியின் பலம் என்ன? பலவீனம் என்ன என்று அவருக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாக அஸ்வின் பிளேயிங் லெவனில் இருப்பார் என்றும், அன்சூல் காம்போஜ் போன்ற வீரர் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேனுக்கு மாற்றாக இம்பாக்ட் வீரராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதனால் அஸ்வின் இடத்திற்கு ஆபத்து இல்லை. மேலும் விஜய் சங்கர் அல்லது ஷேக் ரஷீத் இரண்டு பேரில் ஏதேனும் ஒருவர் பிளேயிங் லெவனுக்குள் வரலாம் என தெரிகிறது. மேலும் தோனி பேட்டிங் வரிசையில் முன்பு வந்து விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.