Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - சிஎஸ்கே-க்கு லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பர் யார்?

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம்? எந்த வீரர்களை விடுவிக்கிறோம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இந்த நிலையில் இனி ஒவ்வொரு அணிகளும் மெகா எலத்திற்கு தயாராக வேண்டியதுதான்.

ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஒவ்வொரு அணிகளும் தற்போது விடுவிக்கப்பட்ட வீரர்கள் என்று யாரை தேர்வு செய்யலாம் என்பதில் ஆர்வம் காட்டும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்பதுதான்.

ipl 2025 csk ms dhoni rishabh pant ishan kishan

தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தொடர்வார் என்றாலும் அவர் பெரிய அளவில் பேட்டிங் செய்ய வருவதில்லை. இந்த சூழலில் தோனிக்கும் வயதாகிவிட்டது என்பதால் அவர் சில போட்டிகளில் இம்பேக்ட் வீரராக மட்டும்தான் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தோனிக்கு பதிலாக எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மாதிரி சிஎஸ்கே அணி வாங்க வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பது ரிஷப் பண்ட் தான். எதிர்பார்த்தபடி டெல்லி அணி ரிஷப் பண்டை தேர்வு செய்யவில்லை. இந்த தருணத்தில் பண்ட் வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனினும் பண்டை வாங்குவதற்கு சிஎஸ்கே மட்டுமல்லாமல் ஆர்சிபி, பஞ்சாப் போன்ற அணிகள் கடுமையாக போராடும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இசான் கிஷன்.

மும்பை அணி, இசான் கிசனை தேர்வு செய்யவில்லை. ஒருவேளை இஷான் கிசனை ஆர் டி எம் கார்டு மூலம் தக்கவைக்கப்படவில்லை என்றால், சிஎஸ்கே அணி இசான் கிஷனை வாங்க முயற்சி செய்யலாம். இதன் மூலம் தொடக்க வீரராக கூட இசான் கிஷன் செயல்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜாஸ் பட்லர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜாஸ் பட்லர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தற்போது ராஜஸ்தான் அணியிடம் எந்த ஒரு ஆர்டிஎம் கார்டும் இல்லை என்பதால் மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யலாம். இதனால் சிஎஸ்கே அணி பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று பஞ்சாப் அணியில் இருந்து ஜானி பாரிஸ்டோவும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் அவரையும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக பயன்படுத்த சிஎஸ்கே அணி முயற்சி செய்யலாம். இதேபோன்று கே எல் ராகுலும் லக்னோ அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கே.எல் ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் தெரியும் என்பதால் அவரை கூட சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யலாம். இதைப் போன்று கேகேஆர் அணியில் இடம்பெற்று இருந்த ஃபில் சால்ட் என்ற அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் நீக்கப்பட்டு இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி அவரையும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யலாம். இதனால் தோனிக்கு பதில் தற்போது சிஎஸ்கே அணி விக்கெட் கீப்பரை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் பல வாய்ப்புகள் இருக்கிறது.

Story first published: Thursday, October 31, 2024, 20:33 [IST]
Other articles published on Oct 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+