Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- சிஎஸ்கே எந்த 2 வீரர்களை RTM மூலம் தேர்வு செய்யும்.. 14 கோடி ரூபாய் வீரருக்கு குட்பை?

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பே அதிகபட்சமாக 6 வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆறு வீரர்கள் இந்திய வீரர்களாகவும் அல்லது வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்கலாம் என்றும் அறிவித்துள்ள பிசிசிஐ, அதிகபட்சமாக 2 அன்காப்ட் இந்திய வீரர்களை தேர்வு செய்யலாம் என்றும் அறிவித்திருக்கிறது.

ipl 2025 ipl retention ms dhoni csk 2025


மேலும் ஒரு அணி நான்கு அல்லது ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டால் மெகா ஏலத்தில் அவர்களுக்கு எஞ்சியுள்ள இடத்திற்கான ஆர் டி எம் கார்டு வழங்கப்படும் என்றும் பி சி சி ஐ அறிவித்துள்ளது. இந்த சூழலில் ஐந்து அல்லது ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொண்டால், ஏலத்திற்கு செல்லும் போது அதிக பணம் கைவசம் இருக்காது என்று சிஎஸ்கே அணி நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு இரண்டு RTM கார்டை ஏலத்தில் பயன்படுத்தலாம் என முடிவெடுத்திருக்கிறது.

அந்த வகையில் சிஎஸ்கே அணி ருதுராஜ், ஜடேஜா, பதிரானா மற்றும் தோனி ஆகியோரை ஏலத்திற்கு முன்பே தக்கவைத்து விடும். இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்கு கிடைக்கும் இரண்டு rtm கார்டை பயன்படுத்தி அவர்கள் எந்த வீரர்களை வாங்குவார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணியின் நட்சத்திர தொடக்க வீரர் கான்வே அணியின் முக்கிய தூண்களில் ஒருவராக இருக்கிறார்.

கான்வே சுழற் பந்து வீச்சையும் அபாரமாக எதிர்கொள்ள கூடியவர். கடந்த சீசனில் கான்வே விளையாடுவது சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியது. இந்த நிலையில் கான்வேவை ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தி சிஎஸ்கே வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறது.

இதேபோன்று இரண்டாவது ஆர்.டி.எம் கார்டை பயன்படுத்தி சிஎஸ்கே அணி சிவம் துபேவை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவம் துபே அதிரடி வீரராக இருக்கிறார். சிவம் துபே நன்றாக ரன் குவிக்கும் போதெல்லாம் சிஎஸ்கே அணி எளிதில் வெற்றி பெறுகிறது. இதனால் இரண்டாவது rtm கார்டை பயன்படுத்தி சிஎஸ்கே அணி சிவம் துபேவை வாங்கலாம்.

Story first published: Wednesday, October 2, 2024, 23:45 [IST]
Other articles published on Oct 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+